“உதயநிதி வந்த பின்தான் ஊக்கத்தொகையே கிடைக்கிறது” - உற்சாகத்தில் துள்ளும் தமிழக வீரர்கள்
சென்னை: தமிழ்நாடு சாம்பியன்ஷிப் அறக்கட்டளை மூலம் சில மாதங்கள் உதவித் தொகை பெற்றவர்கள், இன்று சர்வதேச போட்டிகளில் பங்கேற்று லட்சக்கணக்கில் ஊக்கத்தொகை பெறும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.
இதற்குமுன் விளையாட்டுத்துறை என்றால், அது கிரிக்கெட் அல்லது ஹாக்கி. அதற்கு மேலாகப் போனால் ஸ்விமிங், பேட்மிண்டன், ஸ்குவாஷ் இப்படி சில வகையான விளையாட்டுகளில் மட்டுமே அரசு தன் கவனத்தைச் செலுத்தி வந்தது.

ஆனால், விளையாட்டுத்துறைக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் இத்தனை வகையான விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்களா? இந்த வகையான சர்வதேச போட்டிகள் இருக்கின்றனவா? எனப் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறார் அவர்.
அந்தளவுக்கு Nook and corner என நுழைந்து நுழைந்து போய் அலசி ஆராய்ந்து பலரது திறமைகளை வளர்த்துக்கொள்ளப் பல உதவிகளைச் செய்து வருகிறார்.

அந்த வரிசையில் அவர் உதவி செய்த பல வீரர்கள் இன்று சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுத் தங்கப்பதக்கமே வென்றுள்ளார்கள். இந்தப் புதிய பெருமைக்கு எல்லாம் அவரே சொந்தக்காரர்.
சில நாட்கள் முன்பு சர்வதேச போட்டிகளில் வென்றவர்களை அழைத்து லட்சக் கணக்கான தொகையை ஊக்கத்தொகையாக வழங்கி இருக்கிறார். இந்த வீரர்கள் செய்த சாதனை என்ன? ஊக்கத்தொகை கிடைத்திருப்பதை எப்படி உணர்கிறார்கள்?

ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடைபெற்ற ஆசிய ஓசியானியா சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் கலந்துகொண்டு செரிபரல்பால்சி வீரர்களான பாண்டிய ராஜன், ஜோஷ்வா ஆண்ட்ரூஸ் ஆகியோருக்கு தலா ரூ 1.89 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஜோஷ்வா ஆண்ட்ரூஸ், "நான் 2018 ஆம் ஆண்டிலிருந்து செரிப்ரல்பால்சி விளையாட்டில் ஈடுபட்டு வருகிறேன். முதன்முறையாக இந்தியா சார்பாக ஆசிய ஓசியானியா சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டிருக்கிறேன்.

நாங்கள் அந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்கான அனைத்து பயண ஏற்பாடுகளையும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்து தந்தார். அதற்கான செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார்.
அந்தத் தொகை இல்லை என்றால் எங்களால் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போய் இருக்கும். அதற்கான முயற்சிகளை எடுத்து எங்கள் கனவை நிறைவேற்றித் தந்த உதயநிதிக்கு என் மனமார்ந்த நன்றி" என்கிறார்.

"இந்த மாதிரியான ஊக்கத்தொகைதான் ஒரு விளையாட்டு வீரனை அடுத்த நிலைக்கு உயர்த்தும். அந்தளவில் உதயநிதி அண்ணா செய்துகொடுத்த இந்த உதவியை வாழ்நாளில் ஒரு விளையாட்டு வீரனாக என்னால் மறக்கவே முடியாது.
ஆசிய ஓசியானியா சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வது என்பது ஒரு சிறப்பான அனுபவம். அதற்கு வாய்ப்பு அளித்த விளையாட்டு அமைச்சருக்கு என் நன்றி" என்கிறார் செரிப்ரல்பால்சி இளம் வீரர் பாண்டிய ராஜன்.

"சீனாவில் நடைபெற்ற 19வது ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்கோட்டிங் வீரர் குஹன்வசந்த். அதை ஊக்குவிக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ 2 லட்சத்திற்காகக் காசோலையை வழங்கி அவரைப் பாராட்டியுள்ளார்.
"திருச்சியில் உள்ள கேம்பியன் ஸ்கூல் படித்து வருகிறேன். கடந்த 9 வருடங்களாக ஸ்கோட்டிங் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை மாநில அளவிலான போட்டிகள், தேசிய அளவிலான போட்டிகள், சர்வதேச அளவிலான போட்டிகள் எனப் பலவற்றில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளேன்.

இப்போது 19th Asian Roller Skating Championship 2023 போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளேன்.
ஆனால் இதுவரை யாருமே எனக்கு நிதி உதவி செய்து ஊக்கப்படுத்தியதே இல்லை. விளையாட்டுத்துறைக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அண்ணா பதவியேற்ற பிறகுதான் இதைப்போன்ற ஊக்கத் தொகை எல்லாம் கிடைக்கிறது. ஒரு விளையாட்டு வீரனாக இந்த ஊக்கத்தொகை எனக்கு மனதளவில் உற்சாகத்தை அளித்துள்ளது. அமைச்சர் அண்ணாவுக்கு என் நன்றி" என்கிறார்.

இதனைத் தொடர்ந்து தாய்லாந்தில் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உடல்திறன் விளையாட்டுப் போட்டியில் (IWAS -Thailand) கலந்துகொள்ள இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 வீரர்களுக்கு மொத்தம் ரூ 38.40 லட்சத்திற்கான காசோலையைத் தமிழ்நாடு சாம்பியன்ஷிப் அறக்கட்டளை நிதியிலிருந்து உதயநிதி வழங்கி இருக்கிறார்.
பாரா பேட்மிண்டன் வீர பாலசுப்பிரமணியம் ராஜ்குமார், "கடந்த ஜூலை மாதம் ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச 2023 World Dwarf Games போட்டியில் கலந்துகொண்டேன். அதில் பேட்மிண்டன் பிரிவில் சிங்கிளில் தங்கப்பதக்கம் வென்றேன். அதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிதான் நிதி உதவி வழங்கி இருந்தார்.

அடுத்து இப்போது டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடக்க உள்ள சர்வதேச போட்டியில் கலந்துகொள்ளப் போகிறேன். அதற்கு நாங்கள் உதவி செய்யுமாறு அமைச்சர் அண்ணனிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அந்தக் கோரிகையை ஏற்று தலா ஒருவருக்கு 1லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளார்.
இந்த உதவி மட்டும் இல்லை என்றால் எங்களால் இந்தப் போட்டிகளில் எல்லாம் கலந்துகொண்டே இருக்க முடியாது. எங்கள் துறைக்கு அமைச்சராக உதயநிதி வந்ததிலிருந்து அது பெரிய பொற்காலமாக மாறி உள்ளது.

இந்தளவுக்கு விளையாட்டுத்துறை சுறுசுறுப்பு அடைந்துள்ளது. அதற்காக உதய் அண்ணாவுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஐயாவுக்கும் நன்றி" என்கிறார்.
பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற வயது மூத்தோருக்கான 22வது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டியில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களைக் குவித்துள்ள தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளையும் சந்தித்துப் பாராட்டியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.













Click it and Unblock the Notifications