’வாழ்த்து’ன்னு சொன்ன அடுத்த நாளே இப்படி சொல்லிட்டாரே.. விஜய்க்கு ராஜபக்சே மகன் கொடுத்த அட்வைசை பாருங்க
கொழும்பு: விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துவதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபசேவின் மகன் நமல் ராஜபக்சே, தற்போது விஜய்க்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். கச்சத்தீவு விவகாரங்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றியும் நமல் ராஜபக்சே கூறியுள்ளார். அவர் கூறியதன் முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே. இவர் தற்போது இலங்கை பொதுஜன முன்னணி கட்சியின் தலைவராகவும் எம்.பியாகவும் உள்ளார்.

விஜய்யை மிஸ் செய்வோம்
மலேசியாவில் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு, விஜய்யை தனது ஃபேவரைட் நடிகர் என்றும் அவரை சினிமா உலகில் ரொம்பவே மிஸ் செய்வோம்.. அவரது அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று தனது எக்ஸ் தளத்தில் நமல் ராஜபக்சே பதிவிட்டு இருந்தார்.
நமல் ராஜபக்சேவின் இந்த பதிவு தமிழகத்திலும் அரசியல் ரீதியாக பேசுபொருளானது. இணையத்தில் திமுக, தவெக ஆதரவாளர்கள் கருத்து யுத்தத்திலும் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக இணையத்தில் விமர்சன பொருளாக இது ஆகியிருந்த நிலையில், இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு நமல் ராஜபக்சே தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், நமல் ராஜபக்சே விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் பேசியுள்ளார்.
அரசியல் ஸ்கிரிப்ட் கிடையாது
நமல் ராஜபக்சே கூறியிருப்பதாவது:- அரசியல் என்பது ஒரு ஸ்கிரிப்ட் கிடையாது. அது முழு நேர பொறுப்பாகும். மக்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கும். அவற்றை கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும். எனக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது அரசியல் பயணம் என்பது எல்லைகளை கடந்து ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த நம்பகத்தன்மை அவரது செயல்பாடுகளை பொறுத்தே அமையும்.
விஜய்யை நடிகராக விரும்புகிறீர்களா? அல்லது அரசியல்வாதியாக விரும்புகிறீர்களா என்று கேட்கிறீர்கள். அரசியல்வாதியாக விஜய் இன்னும் சோதிக்கப்படாதவராக உள்ளார். ஒரு நடிகராக, அவருக்கு வயது, திறமை மற்றும் நேரம் அனைத்தும் சாதகமாக உள்ளன. அரசியல் அவரை எங்கு கொண்டு செல்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது
விஜய் மட்டுமின்றி தமிழக அரசியல்வாதிகள் இலங்கை விவகாரத்தை திறந்த மனதுடன் பார்க்க வேண்டும். பாரம்பரிய அரசியல் உணர்வுகளின் கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. தமிழ்நாட்டு அரசியல் என்பது, எப்போதுமே இலங்கை மற்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து உணர்வுப்பூர்வமாக இருந்து வருகிறது. இலங்கையை ஒரு நீண்ட காலத்திற்கான ஒரு கூட்டாளியாக பார்க்க வேண்டிய நேரம் இது.
கச்சத்தீவு விவகாரத்தை பொறுத்தவரை இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது. அது இலங்கைக்கு சொந்தமானது. கச்சத்தீவு விவகாரம் என்பது மத்திய அரசாங்கத்திடம் உள்ளது. மாநில அரசாங்கங்களிடம் இல்லை. அரசியல் பிரசாரங்கள் பிரச்சினையை வேறுவிதமாக திசை திருப்பக்கூடும். ஆனால் கள எதார்த்தங்கள் மிகவும் சிக்கலானவை" என்றார்.
தமிழ்நாட்டை ஆள விரும்புவதற்கு
"விஜய் அரசியலில் இருந்து கொண்டே நடிக்க வேண்டுமா?" என்று கேட்ட போது, அது சாத்தியமான ஒன்றுதான். ஆனால், தற்போதைய சூழல் அடிப்படையில் நடைமுறைக்கு உகந்ததல்ல. அரசியலில் தீவிரமாக இருந்தால் அது முழு நேர பணியாகும். டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களை ஆள்வதற்கோ அல்லது ஆள விரும்புவதற்கோ முழுமையான கவனம் தேவைப்படும்" என்றார்.
விஜய் இதை செய்ய வேண்டும்
"விஜய்க்கு என்ன மாதிரியான அறிவுரைகள் கூற விரும்புகிறீர்கள்?" என்று கேட்ட போது, அரசியலை தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்களின் மக்கள், தொகுதிகளை பற்றி புரிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களால் செய்ய முடிந்ததை மட்டுமே வாக்குறுதியாக கொடுங்கள்.
பின்னர் அதை நிறைவேற்றுவதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். விஜய் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது விஜய் மற்றும் அவரது கட்சியினரின் பொறுப்பு. அரசியலில் யதார்த்த நிலை என்பது மிகவும் வித்தியாசமானது. அந்த யதார்த்தம் விரைவில் தெரியவரும்" இவ்வாறு அவர் பேசினார்.
-
சட்டஒழுங்கு நெருக்கடி.. உள்துறையை விட்டுக் கொடுக்கிறாரா முதல்வர் விஜய்? கைமாறும் போலீஸ் கண்ட்ரோல்? -
நீலாங்கரை சாலையில் திடீரென நின்ற முதல்வர் கான்வாய்.. சாலையில் இறங்கி மக்களை சந்தித்த விஜய்! -
இது மட்டும் நடந்தால்..அடுத்ததும் விஜய் தான் சிஎம்! மகளிருக்கு மாதம் ரூ.2,500.. கோட்டையில் பரபர ப்ளான் -
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
திமுகவில் ரூ.25 லட்சம் வரை லஞ்சம்.. விஜய் ஒரு பைசா வாங்கவில்லை! பூரித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
திமுக ஆட்சியில் தேவையில்லாத திட்டங்கள் எதுவுமில்லை.. அமைச்சர் மரிய வில்சன் சொன்ன வார்த்தை! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம்












Click it and Unblock the Notifications