இலங்கை தமிழர்கள் இந்தியாவில்.. நீண்ட கால விசா கோரி விண்ணப்பிக்க முடியாதாம்! வெளியான முக்கிய தகவல்
சென்னை: இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது பலர் அங்கிருந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு கடந்த வாரம் தான் அறிவித்திருந்தது. இருப்பினும், இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் நீண்ட கால விசா கோரி விண்ணப்பிக்க முடியாதாம். இது தொடர்பாகச் சில முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் பல ஆண்டுகள் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் இருந்து பல ஆயிரம் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார்கள். போர்ச் சூழல் காரணமாக வேறு வழியில்லாமல் அவர்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி சட்டவிரோதமாகத் தமிழகம் வந்தடைந்தனர்.

இருப்பினும், அவர்கள் அகதிகள் முகாமிலேயே தங்க வேண்டி இருந்தது. மேலும், அவர்கள் சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்தவர்கள் என்பதால் சட்டவிரோதக் குடியேறிகளாகவே கருதப்பட்டனர். ஆனால், இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர்களைச் சட்டப்பூர்வ இந்தியக் குடிமக்களாகக் கருத வேண்டும் என்றும் தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது 2015 ஜனவரி 9ம் தேதிக்கு முன்பு இலங்கையில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாகப் பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருத மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சட்டப்பூர்வமாகத் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இது இலங்கைத் தமிழர்களுக்கு மிக முக்கியமான ஒரு அறிவிப்பாகப் பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் இப்போது இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது சட்டவிரோதமாக இந்தியா வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்ற போதிலும் ஆவணமற்ற இலங்கைத் தமிழ் அகதிகள், LTV நீண்ட கால விசா கோரி விண்ணப்பிக்க முடியாது என்று ஒரு மூத்த அரசு அதிகாரி தி இந்து ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு இருந்தாலும் கூட அவர்கள் நீண்ட கால விசா பெற உதவாது. அதற்கு அவர்கள் தகுதி பெற மாட்டார்கள்" என்றார். அதேநேரம் எதனால் இலங்கை அகதிகள் நீண்ட கால விசாவுக்குத் தகுதி பெற மாட்டார்கள் என்பது குறித்து அவர் கூடுதல் தகவல் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை.
-
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications