Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கைக்கு உதவி.. சபாநாயகர் அப்பாவுவின் நேசக்கரம்.. முதல்வரை சந்தித்து ஒருமாத சம்பளத்தை வழங்கினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் உதவி செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு உதவும் நோக்கத்தில் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வழங்கினார்.

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. மத்திய அரசு சார்பில் இலங்கைக்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

Srilnanka Economic Crisis: Speaker Appavu meets stalin and donates one month salary

இந்நிலையில் தான் இலங்கைக்கு உதவி செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு அனுமதிகோரி மத்திய அரசுக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் இருந்து உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். மேலும், உதவிகள், நன்கொடைகள் செய்யும்படி முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தார்.

அதனடிப்படையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வந்தவண்ணம் உள்ளது. இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக முதல் -அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

    India-வில் Srilanka அரசியல்வாதிகள் தஞ்சம்? | உண்மை என்ன? | Oneindia Tamil

    இந்நிலையில் தான் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் சபாநாயகர் அப்பாவு, தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் முக ஸ்டாலினை அப்பாவு சந்தித்து தனது ஒரு மாத சம்பளத்திற்கான காசோலையை வழங்கினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+