10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும்- ஜூன் இறுதிக்குப் பின் அட்டவணை- செங்கோட்டையன்
சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 10-ம் பொதுத்தேர்வுகள் நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்கிற சந்தேகங்களும் எழுப்பப்பட்டன. இதற்கு பதிலளித்திருந்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன், 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் மிக முக்கியமானது;ஆகையால் லாக்டவுனுக்குப் பின் 10-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என கூறியிருந்தார்.
தற்போது மே 17-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. லாக்டவுன் முடிவடைந்த உடனேயே தேர்வுகள் நடத்தப்படுவதற்கு சாத்தியம் இல்லை. ஜூன் மாதத்தில்தான் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதிக்குள் நடத்தப்படும் என்று மத்திய் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.
அதில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும். உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு பொதுத் தேர்வு கால அட்டவணையை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications