எஸ்எஸ்எல்சி ரிசல்ட் 2022: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்..திட்டமிட்டபடி 17ல் வெளியாகும்
10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை மறுநாள் வெளியாகும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை: 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை மறுநாள் வெளியாகும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விடைத்தாள்கள் திருத்தி, மதிப்பெண்கள் பாடவாரியாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் www.deg.tn.gov.in, www.tnresults.nic.in-ல் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்தது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் படிப்பு வெகுவாக பாதித்தது. தமிழகத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் வைக்காமல் அடுத்த ஆண்டிற்கு நேரடியாக தகுதி பெற்றனர். இந்த ஆண்டு கொரோனா தாக்கம் சற்று குறைந்து உள்ளதால் மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்து இருந்தது.

இந்நிலையில் கடந்த மே மாதம் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். காலை 10 மணி முதல் மதியும் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெற்றது. மாணவர்களுக்காக அதிக பேருந்து வசதியும் தமிழக அரசின் சார்பாக செய்து தர பட்டு இருந்தது. இந்த தேர்வுக்கான அட்டவணை மார்ச் மாதமே பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிடப்பட்டு இருந்தது.
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்படாத என்று மாணவர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில், நேரடியாக தேர்வுகள் நடைபெறும் என்று அரசு திட்டவட்டமாக கூறி இருந்தது. கொரோனா சூழலை கருத்தில் கொண்டு மிகவும் பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெற்றது. தற்போது விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை மறுநாள் வெளியாகும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விடைத்தாள்கள் திருத்தி, மதிப்பெண்கள் பாடவாரியாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் www.deg.tn.gov.in, www.tnresults.nic.inல் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications