தமிழ்நாட்டுக்கு பெருமை சேருங்க நண்பரே! ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஸ்டாலின் வாழ்த்து!
சி.பி.ராதாகிருஷ்ணனை நண்பர் என்று குறிப்பிட்டு வாழ்த்துக் கூறிய முதல்வர் ஸ்டாலின்.
சென்னை: அரசியலமைப்பு சட்டப்படி கடமையாற்றி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மூத்த தலைவர்களில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணக்கமான நட்பு பாராட்டக் கூடியவர் சி.பி.ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் திருமண விழா மேடை ஒன்றில் ஸ்டாலினை மிகவும் வெளிப்படையாக பாராட்டி பேசியவர் சி.பி.ராதாகிருஷ்ணன் என்பது திரும்பிப் பார்க்கத்தக்கது.

தமிழகத்தை சேர்ந்த 3 பேர்
இந்தியா முழுவதும் 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இவர் உட்பட இல.கணேசன், தமிழிசை சவுந்தரராஜன் என தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று பேர் வெவ்வேறு மாநிலங்களில் தற்போது ஆளுநர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் வாழ்த்து
இதனிடையே சிபிஆரை பாராட்டி முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்தில், ''ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

நண்பர் என்று
சி.பி.ராதாகிருஷ்ணனை முதலமைச்சர் ஸ்டாலின் நண்பர் என்று குறிப்பிட்டிருப்பது இங்கு கவனிகத்தக்கது. மாற்றுக் கொள்கைகளில் பயணித்தாலும் கூட சி.பி.ராதாகிருஷ்ணனை பொறுத்தவரை நாகரீக அரசியலை கடைபிடிக்கக் கூடியவர். தனி மனித தாக்குதல் உள்ளிட்ட அநாகரீக அரசியல் செய்யாதவர். திமுகவை அரசியல் ரீதியாக எதிர்த்தாலும் ஸ்டாலினுடன் எப்போதும் நட்பு பாராட்டி வந்தவர் சி.பி.ஆர்.

வெளிப்படையாக பாராட்டி
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் திருமண விழா மேடை ஒன்றில் ஸ்டாலினை மிகவும் வெளிப்படையாக பாராட்டி பேசியவர் சி.பி.ராதாகிருஷ்ணன் என்பது திரும்பிப் பார்க்கத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications