''சிறுபான்மையினர் நலனுக்காக போராடி -வாதாடி திட்டங்களை நிறைவேற்றிய திமுக ஆட்சி'' -ஸ்டாலின் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் சிறுபான்மையினர் நலனுக்காக போராடி -வாதாடி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழாவில் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார். மேலும், சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு என்னென்ன செய்திருக்கிறது என்பதை அவர் லிஸ்ட் போட்டுள்ளார் அதன் விவரம் வருமாறு;

Stalin pridely speech, The DMK regime, which fought for the welfare of the minorities and implemented many schemes

''திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போது ஆட்சிப் பொறுப்பேற்கிறதோ, அப்போதெல்லாம் சிறுபான்மையினர் நலனுக்காக போராடக்கூடிய, வாதாடக்கூடிய, சாதனைகளை தீட்டக்கூடிய பல்வேறு பணிகளை நிறைவேற்றி தந்திருக்கிறது என்பதெல்லாம் ஒரு மிகப் பெரிய வரலாறு.

*2007 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி.

*"உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்" 2009-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த நல வாரியத்தில் இதுவரை 15 ஆயிரத்து 327 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

*பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்களுக்கான விடுதிகள் தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் முதல்முறையாக துவங்கப்பட்டது.

இந்த வரலாற்றின் நீட்சியாக நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, செய்து வரும் சில திட்டங்களை மட்டும் இங்கே நான் ஒன்றிரண்டு மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

*சிறுபான்மையினர் விடுதி மாணவ - மாணவியருக்கு, புத்த பூர்ணிமா, மஹாவீர் ஜெயந்தி, பக்ரித், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற சிறுபான்மையினர் பண்டிகைகளுக்கு சிறப்பு உணவு வழங்க ஆணையிட்டுள்ளோம்.

*14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில், 14 இலட்சம் ரூபாய் செலவில் "செம்மொழி நூலகங்கள்" ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, 5 லட்சத்து 90 ஆயிரம் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்க ஆணையிடப்பட்டு கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

*சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு 2021-2022ஆம் ஆண்டு முதல் 1 இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

*கிராமப்புற சிறுபான்மையின மாணவியர் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில, 3 முதல் 6-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு 3 கோடியே 59 இலட்சத்து 90 ஆயிரம் செலவில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

*2023-ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட 3987 பயனாளிகளுக்கு 10 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இப்படி சிறுபான்மையினர் நலன் காக்கும் ஏராளமான திட்டங்களை நம்முடைய அரசின் மூலமாக நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். ''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+