கரூர் கூட்ட நெரிசல் இறப்பை 91 ஆகாமல் பார்த்துக் கொண்டவர் ஸ்டாலின்! விஜய்க்கு திமுக பதிலடி
சென்னை: மேம்பால வழக்கில் பெங்களூரில் இருந்து நேராக நீதிபதி அசோக்குமார் வீட்டுக்கே காலை 11 மணிக்கு சென்று சரண்டர் ஆனவர் முதல்வர் ஸ்டாலின் என காசிமுத்து மாணிக்கம் பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேம்பால வழக்கில் பெங்களூருவில் இருந்து நேராக நீதிபதி அசோக்குமார் வீட்டுக்கே காலை 11 மணிக்கு சென்று சரண்டர் ஆனார் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின். பின்னர் சிறைக்குச் சென்று, விடுதலையும் ஆனார்.

அந்த வழக்கு என்ன ஆனது? 2011 முதல் 2021 வரை அதிமுகவினர் என்ன செய்தார்கள்? சிறை என்றவுடன் ஓடிப்போனவர் இல்லை ஸ்டாலின். சிறை என்றதும் ஓடோடி வந்தவர் அவர். கரூரில் உங்கள் உறவு 41 பேர் இறந்தார்கள் என்கிறீர்கள், அதை 91 ஆகாமல் பார்த்துக் கொண்டவர் முதல்வர் ஸ்டாலின்.
இரண்டு கோடி உறுப்பினர் கொண்ட இயக்கம் எனக்கூறும் தவெகவில் ஒருவரைக்கூட மருத்துவமனையில் காணவில்லை. ஓடிப்போன நீங்கள், எங்களை ஓடியவர்கள் என்று கூறுவது வடிகட்டிய பொய். காசு இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசும் போக்கை ஆதவ் அர்ஜுனா மாற்றிக்கொள்ள வேண்டும்.
பட்டியல், வன்னியர் சமூகங்களைச் சேரவிடாமல் திமுக சதி செய்வதாக அன்புமணி கூறுகிறார். பட்டியல் இனத்தை மட்டுமல்ல, பாமக நிறுவனர் ராமதாசையும் சேர்த்து அன்புமணியிடம் இருந்து காப்பாற்றி வருவது திமுகதான். அன்புமணிக்கு கேபினட் அந்தஸ்தில் சுகாதார அமைச்சர் பதவி வாங்கித் தந்தது திமுக என்பதை மறக்கக் கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
விஜய் தவெகவின் ‘வெற்றி டிவி’? டெல்லியில் டிரேடுமார்க் விண்ணப்பம்! களமிறக்கப்படும் பிரம்மாண்ட திட்டம் -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
ஸ்கீமுக்கு 10 செகண்டா? தலைமை செயலகத்தில் 75 நிமிட சர்ப்ரைஸ்! 436 திட்டங்களை விஜய் நகர்த்தியது எப்படி? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச்












Click it and Unblock the Notifications