5 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பா? ரூ.1000 யாருக்கெல்லாம்? ‘கிளைமேக்ஸ்’.. ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை!
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து வரும் 11ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இறுதி கட்ட ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 1.63 கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்நாட்டின் நிதிச் சூழலை கருத்திக் கொண்டு திட்டத்தில் பயன் பெற பொருளாதாரத் தகுதிகள் வரையறுக்கப்பட்டன. சுமார் 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் ஒரு கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது. ஐந்து ஏக்கருக்கு அதிகமாக நன்செய் நிலம், பத்து ஏக்கருக்கு அதிகமாக புன்செய் நிலம் இருக்கக் கூடாது, சொந்தமாக நான்கு சக்கர வாகனம் இருக்கக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் வகுக்கப்பட்டன. அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் (வார்டு மெம்பர்கள் தவிர) ஆகியோருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடையாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
பயனாளிகள் எண்ணிக்கை 1 கோடிக்குள் இருக்க வேண்டும் என்பதற்காகவே, பொருளாதார அடிப்படையில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனாலும், 1 கோடியே 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலினும், ஒரு கோடியை விட அதிகமானாலும் பரவாயில்லை, தகுதியுள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று சமீபத்தில் கூறியிருந்தார். இதனால் பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியிலிருந்து அதிகரிக்கப்பட உள்ளதாகவே தெரிகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை 1.63 கோடி குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில், நிர்ணயிக்க நிபந்தனைகளுள் அடங்காத 5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாதம்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை பெறத் தகுதி வாய்ந்த பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், தமிழ்நாடு முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினருமான ரகுராம் ராஜன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது பற்றி ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து வரும் செப்டம்பர் 11ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் இறுதிப்பட்டியல் விவரங்களை முன்வைத்தும், திட்டம் செயல்படுத்தப்படும் விதம் குறித்தும், இதற்கான விழா ஏற்பாடுகள் குறித்தும் வரும் 11ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, வரும் செப்டம்பர் 15ஆம் தேதி, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று, அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் நடைபெறும் விழாவில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின். அன்றைய நாளே, இந்தத் திட்டத்தில் தகுதி பெற்ற குடும்பத் தலைவிகள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.1000 செலுத்தப்பட உள்ளது.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
வன்னி அரசு வந்ததும் வராததுமா செய்த வேலை.. அரசு அதிகாரிகள் பங்கேற்ற தாட்கோ கூட்டத்தில் என்ன நடந்தது -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா?












Click it and Unblock the Notifications