காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் மீது மீண்டும் வருத்தத்தில் இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். திமுகவின் தொகுதிகளையும் வேட்பாளர்களையும் அறிவித்து விட்டு பிரச்சாரத்துக்கு கிளம்பி விடலாமா? என்று கட்சியின் முக்கியஸ்தர்களிடம் தீவிர ஆலோசனை நடத்தி இருக்கிறார் ஸ்டாலின்.

தேர்தல் பணிகளில் தமிழகத்திலேயே முதல் கட்சியாக திமுக காட்டிய வேகத்தைப் பார்த்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தேர்தல் களத்திற்கு திமுக சென்று விடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திய சிக்கல்களால் கூட்டணிக் கட்சிகளுக்கு எண்ணிக்கையை முடிவு செய்வதில் ஏக இழுபறி நீடித்தது. காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களின் அணுகுமுறையால் ஒட்டு மொத்த திமுக தலைவர்களும் மன உளைச்சல்களுக்கு ஆளானார்கள்.

mk stalin

இதனால் தேவையில்லாத பிரச்சனைகளால் நாட்கள் நகர்ந்ததே தவிர திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்படாமல் இருந்தது. பல்வேறு நடவடிக்கைகளை திமுக எடுத்ததன் விளைவாக ஒரு கட்டத்தில் 28 தொகுதிகளில் காங்கிரசின் அபிலாஷைகளை முடிவுக்கு கொண்டு வந்தார் ஸ்டாலின். இதனையடுத்து, கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளுக்கான எண்ணிக்கையும் முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மனுத் தாக்கலுக்கான நாட்களும் நெருங்கி விட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை இறுதி செய்தால் தான் மற்ற கட்சிகளுக்கும் ஒதுக்கீடு செய்து திமுகவின் தொகுதிகளை அறிவிக்க முடியும்.

ஏற்கனவே ஒவ்வொரு கட்சிகளுக்கான விருப்பப் பட்டியலை வாங்கி வைத்துள்ள திமுக தலைமை, அதனடிப்படையில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்யலாம் ? என ஒரு பட்டியலை கடந்த 4 நாட்களுக்கு முன்பு தயாரித்து வைத்திருக்கிறது திமுக.

அதனை திமுகவின் பேச்சுவார்த்தைக் குழுவினரிடம் கொடுத்து இவைகளை சம்மந்தப்பட்ட கட்சிகளிடம் பேசி ஓகே வாங்குங்கள் என தெரிவித்திருந்தார் ஸ்டாலின். இந்த நிலையில், நேற்று காங்கிரஸை அழைத்தது திமுக பேச்சுவார்த்தைக் குழு. காங்கிரஸ் தலைவர்களும் திமுகவின் பேச்சுவார்த்தைக் குழுவினரை சந்தித்தனர்.

அப்போது காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளுக்கான லிஸ்ட்டை திமுக பேச்சுவார்த்தைக்குழு நீட்டியது. அதை பார்த்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் அதிர்ச்சி அடைந்தார். அதில் காங்கிரசின் சிட்டிங் தொகுதிகள் 17-ல் 7 தொகுதிகள் மட்டுமே மீண்டும் தரப்பட்டிருந்தது. அதில் மீதமுள்ள 10 தொகுதிகளை திமுக எடுத்துக்கொண்டது. அந்த 10 தொகுதிகளோடு கூடுதலாக கொடுக்கப்பட்ட 11 தொகுதிகளும் சேர்த்து 21 தொகுதிகளை புதிதாக கொடுத்திருந்தது திமுக.

இதற்கு காரணம், காங்கிரஸ் கட்சியின் விருப்பப் பட்டியலில் அக்கட்சியின் சிட்டிங் தொகுதிகள் 13-ம், புதிதாக 15 தொகுதிகளும் இருந்தன. புதிதாக கேட்கப்பட்ட 15 தொகுதிகளும் திமுகவுக்கு வலிமையான வோட் பேங்க் உள்ள தொகுதிகள். அந்த தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு சொற்ப வாக்குகள் மட்டுமே உள்ளன. குறிப்பாக, சென்னையில் மட்டுமே 4 தொகுதிகள் வேண்டும் என தங்களின் விருப்பத்தை தெரிவித்திருந்தன.

ஆனால், இதையெல்லாவற்றையும் ஓரங்கட்டிய திமுக, காங்கிரசின் சிட்டிங் தொகுதிகள் 7 -ம் மற்ற தொகுதிகளை புதிதாகவும் தருவதில் இருந்து பின்வாங்கவில்லை. இதனை நீங்கள் ஏற்க வேண்டும்.. இதில் முரண்பாடுகளை உருவாக்கக் கூடாது. எங்கு நின்றாலும் உங்களை ஜெயிக்க வைக்கப்போவது திமுகதான். அதனால், நாங்கள் கொடுக்கிற தொகுதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று எதார்த்த நிலையை தெரிவித்தது திமுகவின் பேச்சுவார்த்தை குழு.

ஆனால், திமுகவின் விருப்பத்தை ஏற்க மறுத்த காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் வருகிறோம் என சொல்லி, அறிவாலயத்திலிருந்து வெளியேறினர். இந்த நிலையில், நேற்று இரவு தங்களின் பேச்சுவார்த்தைக் குழுவினருடன் தீவிர ஆலோசனை நடத்தி இருக்கிறார் ஸ்டாலின். அப்போது, காங்கிரஸ் நடந்து கொண்ட விதத்தை விவரித்தனர் திமுகவின் இரண்டாம் நிலை தலைவர்கள்.

இதனையொட்டி சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடந்துள்ளது. அதில் சில மாற்றங்களை மட்டும் செய்து இதனை காங்கிரஸ் ஏற்கிறார்களா? என கேட்டு முடிவெடுங்கள். அவர்கள் வருவதற்கு தாமதமானால் கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்யுங்கள். காங்கிரசை நான் டீல் செய்து கொள்கிறேன். காங்கிரஸ் ஒத்துழைத்தாலும் ஒத்துழைக்காவிட்டாலும், திமுகவின் தொகுதிகளையும் வேட்பாளர்களையும் ஓரிரு நாளில் அறிவித்து விட்டு, தேர்தல் பிரச்சாரம் மற்றும் அடுத்தக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தலாம் என்று சொல்லி, சில அறிவுறுத்தல்களையும் பேச்சுவார்த்தைக் குழு தலைவர்களுக்கு தெரிவித்து ஆலோசனையை முடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+