சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 கோப்புகளில் ஸ்டாலின் கையெழுத்திட்டாரே!.. அந்த பேனா கருணாநிதியுடையதாம்.. சென்ட்டிமென்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: கருணாநிதி நீண்ட காலமாக பயன்படுத்திய பேனாவை தான் பதவியேற்ற நாள் அன்று 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தியுள்ள சம்பவம் ஸ்வாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    ❤️ CM MK Stalin-ன் சுவாரஸ்யமான Pen Sentiment | Oneindia Tamil

    தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட கையோடு சில கோப்புகளில் கையெழுத்திட்டிருந்தார். அதில் அவர் பயன்படுத்திய பேனாவின் சிறப்புகள் குறித்து சமூகவலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பேனா ஸ்டாலினின் தந்தை கருணாநிதியால் பயன்படுத்தப்பட்ட பேனா என சொல்லப்படுகிறது. கருணாநிதி குறிப்பிட்ட பிராண்ட் பேனாவை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

    எந்த மாடல்

    எந்த மாடல்

    இதுகுறித்து அந்த பேனா கடைக்காரர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஸ்டாலின் பயன்படுத்திய அந்த பேனா மும்பையில் தயாரிக்கப்படுகிறது. அந்த பேனா Wality 69 fountain pen ரகத்தை சேர்ந்தது. இந்த பேனாவைத்தான் கருணாநிதி நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தார்.

    பேனா

    பேனா

    அப்பா பயன்படுத்திய பேனாவை மகனும் பயன்படுத்துவது சந்தோஷமாக இருக்கிறது. அந்த பேனா நல்ல தரமானது. எழுதுவதற்கு நன்றாக இருக்கும். இது போன்ற தடிமனான பேனாவில் எழுதுவதால் கை வலிக்காது. மு.க.ஸ்டாலின் பதவியேற்ற போது கோப்புகளில் கையெழுத்திட்டது எங்கள் கடை பேனா.

    தலைமுறை

    தலைமுறை

    அதை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எல்லாரிடமும் காண்பித்தேன். அந்த பேனா எங்கள் கடையை தவிர்த்து வேறு எங்கும் கிடைக்காது. அப்பா பயன்படுத்திய பேனாவை ஸ்டாலினும் பயன்படுத்துவது சென்டிமென்ட். எங்கள் கடை 1920 முதல் தொடங்கப்பட்டது. நான் 3ஆவது தலைமுறையாக பேனா கடை நடத்தி வருகிறேன்.

    பேனா கிரிப்

    பேனா கிரிப்

    இந்த கடையை தொடங்கி 100 ஆணடுகள் ஆகிறது. பேனாவை பேலன்ஸ் பார்த்துதான் செலக்ட் செய்ய வேண்டும். பேனாவை பிடிக்க கிரிப் வேண்டுமெனில் பவுண்டைன் பேனா அதிலும் கனமான பேனாவை பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.

    English summary
    Stalin uses Karunanidhi's pen which was made in Mumbai on swear in ceremony.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X