பத்திரப்பதிவில் மாற்றம்.. எங்கிருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் பதியலாம்.. அரசு ஸ்டார் 3.0 அசத்தல்
சென்னை: பாதுகாப்பான பத்திரப்பதிவை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், பொதுமக்களும் டிஜிட்டல் கையெழுத்தை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்து வந்த நிலையில், அதுகுறித்த கூடுதல் விவரங்களும் மகிழ்ச்சி தகவலும் வெளியாகி உள்ளன..
ஸ்டார் 2.0 மென்பொருளுடன் "தமிழ்நிலம்" தகவல் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளதால், ஆன்லைன் முறையில் நில அளவை விவரங்கள், ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள், விற்பனை மற்றும் தொடர்பு விவரங்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் தெரிந்து கொண்டு பதிவிறக்கம் செய்யலாம். மாவட்டம், வட்டம், கிராமம், மாநகராட்சி, நகராட்சி விவரங்கள், அரசாணைகள், சுற்றறிக்கைகள் மற்றும் பரப்பளவு மாற்றங்களும் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன.

கள ஆய்வு தேவையில்லாத பத்திரங்கள் பதிவு செய்த நாளிலேயே திருப்பிக் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக நிறைவேற்றும் சார் பதிவாளர்களுக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்படுகிறது.
எங்கிருந்தும் பத்திரப்பதிவு
எனினும், சொத்து பத்திரங்களிலும் இந்த முறையை கொண்டு வர வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக இதுநாள் வரை இருந்து வந்தது. இதை தடுக்கவே 'டிஜிட்டல்' கையெழுத்து முறை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே பதிவுத்துறையில் தற்போது பயன்பாட்டில் உள்ள, 'ஸ்டார் 2.0' மென்பொருளுக்கு பதிலாக, 'ஸ்டார் 3.0' என்ற புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு 2021ல் அறிவித்தது.
ஸ்டார் 3.0 பலன்கள்
இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, பொதுமக்கள் எங்கிருந்தும் பத்திரப்பதிவு செய்யும் வகையில் "ஸ்டார் 3.0" என்ற புதிய சாப்ட்வேர் உருவாக்க முடிவாகி உள்ளது... இப்போது சார் பதிவாளர்கள் உள்ளிட்ட பல நிலை அலுவலர்கள் அரசு துறைகளில் கோப்புகள், உத்தரவுகள், கடிதங்கள் என எதுவாக இருந்தாலும் டிஜிட்டல் கையெழுத்து முறையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதில், பாதுகாப்பான பத்திரப்பதிவை உறுதி செய்ய, பொதுமக்களும் டிஜிட்டல் கையெழுத்தை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடக்கிறது" என்று கூறியிருந்தார்.
எங்கு இருந்தும் எப்போதும் பத்திரம் பதிவு
இந்நிலையில் இந்த ஸ்டார் 3.0 சாப்ட்வேர் தற்போது நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதை பயன்படுத்துவதற்கான சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இதன்போது, பதிவுத்துறை இணையதளத்தில் 'ஸ்டார் 3.0' மென்பொருளை இணைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது...
இந்த புதிய மென்பொருள் மூலம் சொத்து வாங்குபவர்கள் எங்கிருந்தும், எந்த நேரத்திலும் பத்திரப்பதிவை செய்யலாம். இதில் மொத்தம் 18 புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
மக்கள் டிஜிட்டல் கையெழுத்து மூலம் சொத்து பத்திரங்களை டிஜிட்டல் வடிவில் பெற முடியும். இதனால் பதிவுத்துறை அலுவலகங்கள் முழுமையாக காகிதமற்ற முறையில் செயல்படும். கூடுதலாக, கட்டணங்களை க்யூ.ஆர். குறியீடு மூலம் செலுத்தும் வசதியும் இதில் இடம் பெற்றிருப்பதால் பத்திரப்பதிவு பணிகள் எளிமையாகவும் விரைவாகவும் நடைபெறும்.
சென்னை, கோவை உள்ளிட்ட சில மண்டலங்களில் கடந்த வாரம் புதிய மென்பொருளை பயன்படுத்தி பத்திரப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன..,
பதிவுத்துறை ஆன்லைன் வசதிகள்
இந்த நடைமுறை அமலுக்கு வந்துவிட்டால், புதிய திட்டங்களில் வீடு அல்லது மனை வாங்குவோர் பதிவாளர் அலுவலகத்தை நேரில் செல்லாமல் பில்டர் அல்லது மேம்பாட்டாளர் அலுவலகத்தில் இருந்தே பத்திரப்பதிவை முடிக்கலாம். வார இறுதி, விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களில் கூட மக்கள் விரும்பும் நேரத்தில் ஆன்லைனில் பத்திரப்பதிவை மேற்கொள்ளலாம்.
பதிவாளர் அலுவலகங்களில் பிரிக்கப்பட்ட நாட்களை கருத்தில் கொண்டு, வெவ்வேறு அலுவலகங்களை அணுகாமல் சொத்து வில்லங்க சான்றிதழ்களை ஒரே இடத்தில் ஆன்லைனில் பெற முடியும். சான்றிடப்பட்ட பத்திரப் பிரதியை மூன்று நாட்களுக்குள் வழங்கும் வசதி உள்ளது. சொத்து வாங்குபவர்கள் வரைவு பத்திரங்களை ஆன்லைனில் நான்கு கட்டங்களில் தயாரிக்க வழிகாட்டுதல்கள் பெறுவார்கள். பத்திரப்பதிவின் இறுதி கட்டணங்களை க்யூ.ஆர். குறியீடு மூலம் செலுத்தலாம்..
அரசு விரைவில் குட்நியூஸ்
இப்போது தொழில்நுட்ப ரீதியாக 'ஸ்டார் 3.0' மென்பொருள் தயாராக இருந்தாலும், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் முன்னிலையில் அதிகாரப்பூர்வ துவக்க விழா நடைபெறும் என்று பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல்வர் மற்றும் அமைச்சர்களின் நேரம் கிடைத்ததும், மென்பொருள் பயன்பாட்டை தொடங்கும் விழா நடைபெறும். இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்...!!
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications