STAR 3.0 அசத்தல் திட்டத்தின் சூப்பர் வசதி.. சொத்து விற்பனையா? அரசின் பத்திரப்பதிவு இனி ரொம்ப ஈஸி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சொத்து விற்பனை மற்றும் பரிமாற்றங்களில் நீண்டகாலமாகத் தொடர்ந்த ஒரு பெரும் சவாலுக்குத் தீர்வு காணும் வகையில், பதிவுத்துறை தற்போது அதிரடியான புதிய நடைமுறை ஒன்றை கொண்டுவந்துள்ளது. வீடு அல்லது மனைகளை விற்பனை செய்யும் போது, சந்தை மதிப்பை விட அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருப்பது, சொத்து உரிமையாளர்களுக்கு ஏகப்பட்ட நிதிச்சுமையை ஏற்படுத்தி வந்தது. இத்தகைய முரண்பாடுகளைச் சரிசெய்ய, பதிவுத்துறையில் இப்போது வெளிப்படையான மேல்முறையீட்டு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது என்ன தெரியுமா?

பொதுவாக தமிழகத்தில் சொத்துப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கும் போது, அவை அரசாங்கம் நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்புப்படியே பதியப்பட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

tamil nadu star 3 0 property registration reform property appeal system government office visits automated registration system digital governance tamil nadu 3 0

தமிழக பதிவுத்துறை

சர்வே எண் வாரியாகவும், தெருக்களின் முக்கியத்துவத்தைப் பொறுத்தும் நிலங்களுக்குத் தனித்தனியாக மதிப்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால், காலப்போக்கில் அந்தப் பகுதிகளில் நிலவும் சந்தை மதிப்பை விட, அரசாங்கத்தின் வழிகாட்டி மதிப்பு பல இடங்களில் மிக அதிகமாக உயர்ந்து காணப்படுகிறது.

இத்தகைய சூழலில் விற்பனையாளர்களும் வாங்குபவர்களும் கூடுதல் முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள். சிறிய தொகையாக இருந்தால் மக்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, ஆனால் லட்சக்கணக்கில் கூடுதல் செலவு ஏற்படும் போது, சாதாரண மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

பத்திரப்பதிவு துறையில் அதிரடி

கடந்த கால ஆட்சிக் காலத்தில், இத்தகைய வழிகாட்டி மதிப்பு தொடர்பான முறையீடுகள் மீது நடவடிக்கை எடுப்பதில் பல்வேறு தடைகள் இருந்தன. பத்திரங்களை மாவட்ட பதிவாளர் வாயிலாக மேல்முறையீட்டுக்கு அனுப்புவதற்குச் சார்-பதிவாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.

அத்துடன் பொதுமக்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக பலமுறை அலுவலகங்களுக்கு அலைய வேண்டியிருந்தது. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த நடைமுறைகளில் பெரும் தெளிவு ஏற்பட்டுள்ளதாகப் பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


"ஸ்டார் 3.0" நவீன மென்பொருள் வசதி

அமலுக்கு வந்துள்ள "ஸ்டார் 3.0" என்ற நவீன மென்பொருள், இந்தச் சிக்கலை எளிதாகக் கையாள வழிவகை செய்துள்ளது. இந்த மென்பொருளில் சொத்து விற்பனைக்கான அடிப்படை விவரங்களைப் பதிவு செய்யும்போதே, அரசாங்க வழிகாட்டி மதிப்புக்கும், பத்திரத்தில் உள்ள சந்தை மதிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடு தானாகவே துல்லியமாகக் கண்டறியப்படுகிறது.

ஒருவேளை வழிகாட்டி மதிப்பை விட பத்திரத்தின் மதிப்பு குறைவாக இருந்தால், சம்பந்தப்பட்ட ஆவணம் தானியங்கி முறையில் மேல்முறையீட்டுக்காக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் வகையில் மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

சொத்து பதிவில் மாற்றம்

இந்த செயல்முறையில் சார்-பதிவாளர்கள் உரிய ஒத்துழைப்பை வழங்கினால், பொதுமக்கள் எந்தவிதமான அலைச்சலுக்கும் உள்ளாக வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட பத்திரத்தின் பிரதி கைக்கு வருவதற்கு முன்னரே, மேல்முறையீட்டுக்கான பணிகள் தொடங்கி விடுவதால், கால விரயம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

மக்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்ப வசதி, சொத்து பரிமாற்றங்களில் ஒளிவுமறைவற்ற தன்மையை உறுதி செய்வதோடு, அரசு நிர்ணயித்துள்ள மதிப்பில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் அதனைச் சரிசெய்யக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

பதிவுத்துறையின் இந்த மாற்றம், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சொத்து வணிகத்தில் ஈடுபடும் சாதாரண மக்களுக்குப் பெரும் பயன் தரும் என்பதில் சந்தேகமில்லை.. அதுமட்டுமல்ல, இந்த வசதியைச் சார்-பதிவாளர்கள் முழுமையாகச் செயல்படுத்தத் தொடங்கினால், பத்திரம் பதிவதில் இருக்கும் தேவையற்ற சிக்கல்கள் நீங்கி, மக்கள் நிம்மதியுடன் சொத்துகளைப் பதிவு செய்ய முடியுமாம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+