ஸ்டார் தொகுதி: திருவெற்றியூரில் சீமானுக்கு எதிராக கழகங்கள் அதிரடி வியூகம்.. செம்ம கவனிப்பு கன்பார்ம்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அதிமுக, திமுக இரண்டு கட்சிளுமே, சீமானை வெற்றி பெற விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளன.
இதன்படி திருவெற்றியூர் தொகுதி வாக்காளர்கள் நன்கு கவனிக்கப்பட்டால். கடும் சவாலை சீமான் சந்திக்கக்கூடும். அதுமட்டுமின்றி கரும்பு விவசாயி' சின்னதை இங்குள்ள மக்களுக்கு சீமான் கொண்டு சேர்ப்பதும் பெரிய வேலையாக இருக்கும்.
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடப்போவதாக கூறிய சீமான் திடீரென திருவெற்றியூரில் போட்டியிடுவது ஏன் என்ற முணுமுணுப்புகள் ஆரம்பத்தில் இருந்தன. ஆனால் அதற்கான காரணத்தை சீமான் விளக்கி கூறிய பின் முணுமுணுப்புகள் அடங்கியது.

ஏன் போட்டி
சீமான் திருவெற்றியூரில் போட்டியிட முக்கிய காரணம் கடந்த 2019 லோக்சபா தேர்தல் முடிவு. வடசென்னை லோக்சபா தொகுதியில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே 17,000 வாக்குகளுக்கு மேல் நாம் தமிழர் கட்சி பெற்றிருந்தது. அத்துடன் நாம் தமிழர் கட்சிக்கு அதிக கிளைகள் உள்ள பகுதியாகும். அத்துடன் விளம்பு நிலை மக்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் திருவொற்றியூரை சீமான் தேர்வு செய்ததாக நாம் தமிழர் கட்சியினர் கூறுகிறார்கள்.

மறுக்கும் சீமான்
ஆனால் சீமான் மீது இன்னொரு விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது, நாடார்கள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் அவர் திருவெற்றியூரில் நிற்பதாக கூறப்பட்டது.
அதை மறுத்துள்ளது நாம் தமிழர் கட்சி வட்டாரம். இதனிடையே தொகுதியில் உள்ள பிரச்சனைகளை நன்கு அறிந்து வைத்துள்ள சீமான், ஏற்கனவே இரண்டு முறை தொகுதி முழுக்க வலம் வந்து பிரச்சாரம் செய்துவிட்டார். மீண்டும் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகிறார்.

சங்கர் ஏன்
திருவெற்றியூரில் திமுக சார்பில் மறைந்த கே.பி.பி.சாமியின் தம்பி கே.பி.சங்கர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். கே.பி.பி.சாமி இரண்டு முறை இதே தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் .அப்போது சங்கர்தான். அவருக்கு முழுயைமாக வேலை பார்த்தவர். தொகுதியின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர் என்பதால் நம்பி சீட் கொடுத்திருக்கிறது திமுக தலைமைங. சங்கர் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வாக்குகள் அதிகம் விழும் என்று கணித்து வைத்துள்ளதுதிமுக.

மீனவர் ஆதரவு
இதற்கிடையே அ.தி.மு.க சார்பில் கே.குப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கனவே இரண்டு முறை இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். கட்சியில் சீனியர். மீனவர் என்பதால் சமூக ஆதரவும் அதிகம் உள்ளது. அதேநேரம் தொகுதியில் சரியாக திட்டங்களை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் எதிர்தரப்பு முன்வைத்து வருகிறது.

சீமானுக்கு சவால்
ஏழை, அடித்தட்டு மக்கள் வாக்குகள் நமக்கு அதிகம் விழும் என்று நம்பிக்கையில் திருவெற்றியூரில் களம் இறங்கி உள்ள சீமானை, அவர்களை வைத்தே காலி செய்ய திமுக மற்றும் அதிமுக இரண்டுமே திட்டமிட்டிருகின்றன. வெற்றி ஒருபுறம் பெற வேண்டும் என்று உறுதியாக உள்ள திமுக மற்றும் அதிமுகவினர், சீமானுக்கு வாக்குகள் சென்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளன. இரண்டு கட்சிகளும் வாக்காளர்களை நன்கு கவனிக்கவும் வாய்ப்பு உள்ளதாம். இந்த சவால்களை எப்படி சீமான் எதிர்கொள்ள போகிறார் என்பது மே 2ம் தேதி தெரியும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications