நீட் விலக்கு மசோதா.. மாநில அரசுக்கு அதிகாரம்.. மத்திய அரசுக்கு மா.சுப்பிரமணியன் பதில்!
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரமுள்ளது என்று மத்திய அரசுக்கு பதில் அனுப்பப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலகாலமாக நீடித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு ஆளுநர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

மத்திய அரசு கேள்வி
இந்த மசோதா குறித்து மத்திய அரசு அண்மையில் விளக்கமளித்துள்ளது. அதில் தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா, உள்துறை அமைச்சகத்திற்கு மே 2ம் தேதி வந்து சேர்ந்தது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் மாநில ஆளுநர்கள் அனுப்புகிற சட்ட வரைவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு கருத்து கேட்பிற்காக அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படுவது நடைமுறை. அதுபோன்று மத்திய அமைச்சகங்கள் கருத்து கேட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

கேள்விகள் என்ன
இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய அரசு தரப்பில் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள குறிப்பில், இந்த மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? இது மத்திய அரசு வரம்புக்குள் வருகிறதா? தேசிய மருத்துவ ஆணைய சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு இது முரண்பட்டு அமைந்துள்ளதா? தேசிய தகுதி நுழைவுத் தேர்வு உள்ளிட்ட வரலாற்று சீர் திருத்தங்கள் உறுதி செய்யும் வகையில் உள்ள நீட் தேர்வுக்கு இந்த மசோதா பாதிப்பை ஏற்படுத்துமா? தேசிய கல்வி கொள்கைக்கு முரணானதா? உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மா.சுப்பிரமணியன் பேட்டி
இந்தநிலையில் மத்திய அமைச்சகங்களின் கேள்விகளுக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் மூலம் பதில் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், மத்திய அரசு எழுப்பியுள்ள 6 கேள்விகளுக்கும் பதில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பதில்கள் வைத்து நாளை மீண்டும் ஆலோசிக்கப்படும். அதன் பிறகு மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.

தமிழக அரசு நம்பிக்கை
இதில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரமுள்ளது என்று பதில் எழுதப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு எழுப்பியுள்ள 6 கேள்விகளுக்கும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையுடன் உரிய பதில் தயாரிக்கப்பட்டுள்ளது. அது இன்னும் ஓரிரு நாட்களில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். சரியான பதில்கள் கூறியுள்ளதால் நீட் விலக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications