சென்னை காசிமேடு தனுஷ்.. பேட்மிண்டன் வீரருக்கு நடக்க கூடாத விஷயம்! டாக்டர் சொன்னதுமே விபரீத முடிவு
சென்னை: சென்னை ராயபுரம் அருகே காசிமேடு கடலில் குதித்து மாநில அளவிலான பேட்மிண்டன் வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இனிமேல் பேட்மிண்டன் விளையாட முடியாது என மருத்துவர்கள் கூறியதால், மன உளைச்சலில் இருந்த அவர் கடலில் குதித்து தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் ஜிஏ ரோடு அருகே வசித்து வருபவர் சரவணகுமார். இவரது 21 வயது மகன் தனுஷ். இவர் தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். பேட்மிண்டன் விளையாடி வந்துள்ளார். இதேபோன்று மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் விளையாடி பதக்கமும் வென்று இருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு காலில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கால் வலியில் அவதிப்பட்டு வந்த அவர் பேட்மிண்டன் விளையாட முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி வீட்டில் இருந்து சென்ற தனுஷ் அதன்பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. எப்படியும் இரவு வீட்டிற்கு வந்துவிடுவார் என்று பெற்றோர்களும் இருந்துவிட்டனர்.
ஆனால் இரவு நேரம் ஆகியும் அவர் வரவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவரது நண்பர்களுக்கு போன் செய்து பார்த்தனர். எங்கு தேடியும் காணவில்லை என்பதால், அவர்கள் போலீசுக்கு போன் செய்து காணவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். இதன்பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று சென்னை ராயபுரம் காசிமேடு அருகே கடலில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் இது தனுஷாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் அவரது பெற்றோருக்கு போன் செய்து அழைத்து வந்தனர். அங்கு வந்து பார்த்த பெற்றோர் உயிரிழந்தது என் மகன் தான் என உறுதி செய்தனர். மேலும் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதையடுத்து பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த அவரது உடலை தீயணைப்பு வீரர் உதவியுடன் போலீசார் நீண்ட நேரம் போராடி மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தனுஷ் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
அதாவது தனுஷுக்கு சில மாதங்களுக்கு முன்பு வலது காலில் காயம் காரணமாக வலி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர், பேட்மிண்டன் விளையாட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். கால் வலியுடன் கடைசியாக சில மாதத்துக்கு முன்பு கூட பேட்மிண்டன் விளையாடி உள்ளார். டாக்டரிடம் பரிசோதனை செய்தபோது, அவரது வலது காலில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும், இனிமேல் அவரால் பேட்மிண்டன் விளையாட முடியாது எனவும் டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.
எப்போதும் பேட்மிண்டன், பேட்மிண்டன் என்று இருந்த தனுஷால் டாக்டர்கள் சொன்னதை கேட்டு கடும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த 9 ஆம் தேதி வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்ற தனுஷ் ராயபுரம் அருகே கடலில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பேட்மிண்டன் விளையாட முடியாது என்ற விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications