ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றக் கோரிய வழக்கு: அரசும் வேதாந்தா நிறுவனமும் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசும், வேதாந்தா நிறுவனமும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசும், வேதாந்தா நிறுவனமும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் மனுதாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி அளித்த நீதிபதிகள்,வழக்கு விசாரணையை 5 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துணைத் தலைவர் சுமதி உட்பட பலர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவின் பெயரில், தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை மக்கள்போராட்டம் காரணமாக மூடப்பட்டது.

இந்நிலையில் ஆலை வளாகத்தில் உள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிடக் கோரி பேராசிரியர் பாத்திமா தாக்கல் செய்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கூடுதல் மனுதாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், மனுவிற்கு தமிழ்நாடு அரசும் வேதாந்தா நிறுவனமும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 5 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த வழக்கும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே ஆலையை மூட வேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்து அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை 6 மாதங்களுக்கு தள்ளி வைத்தனர். மேலும், உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவு பிறபித்தாலும், அதுசம்பந்தமாக முறையீடு செய்து, வழக்கை முன்கூட்டியே பட்டியலிட கோரிக்கை வைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.
ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துணைத் தலைவர் சுமதி உட்பட பலர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தமனுவின், தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை மக்கள்போராட்டம் காரணமாக மூடப்பட்டது.
கொரோனா 2ஆம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக உச்ச நீதிமன்ற அனுமதியின்பேரில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுமதி ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் கொரோனா 3வது அலை ஏற்பட்டால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படக்கூடாது, இதனால் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கவும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கக் கோரி ஜூலை 27ஆம் தேதி ஆலை முன்பு சிலர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் மீது சிப்காட் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்ற நோக்கத்திலேயே அவர்கள் கூடினர். இதனால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி இளங்கோவன் விசாரித்தார். பின்னர் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், மனு தொடர்பாக சிப்காட் போலீசார் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி











Click it and Unblock the Notifications