சென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. பூங்கா நகர் ஸ்டேஷனில் இன்று முதல் ரயில் நிற்கும்.. நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 14 மாதங்களுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கி உள்ளது. ஆனாலும் இந்த ரயில் சென்னை பார்க் டவுன் ரயில் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கு நின்று செல்லும் என்று ரயில்வே சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் புறநகர் சேவையாக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மூலம் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

சென்னை போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்து ரயில்கள் மூலம் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் தினமும் இந்த மின்சார ரயில்களில் லட்சக்கணக்கில் பயணிகள் பயணித்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் சென்னை கடற்கரை - எழும்பூர் ரயில் முனையம் இடையே 4வது வழித்தட பணி கடந்த ஆண்டு தொடங்கியது.
மொத்தம் 4.3 கி.மீ தொலைவுக்கு 4வது வழித்தடம் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியின் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27 ம் தேதி முதல் சென்னை கடற்கரை - வேளச்சேரி, , வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டனர்.
தற்போது பணி முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 29 ம் தேதி முதல் மீண்டும் சென்னை கடற்கரை - வேளச்சேரி, வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே ரயில் சேவை தொடங்கியது. இருப்பினும் இந்த ரயில்கள் சென்னை பார்க் டவுன் (பூங்கா நகர்) ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அங்கு பிளாட்பாரம் தொடர்பான பணிகள் நிறைவு பெறாததால் அங்கு ரயில்கள் தற்காலிகமாக நிற்காது என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் தற்போது பிளாட்பார்ம் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இதனால் இருமார்க்கமாக சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இயங்கும் ரயில் இன்று முதல் பார்க் டவுன் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இன்று முதல் பயணிகள் பார்க் டவுன் ரயில் நிலையத்தில் ஏறி இறங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications