மெரீனாவில் பலத்த காற்று... ஆபத்தை உணராமல் பண்டிகை நாளைப் போல படையெடுத்த மக்கள்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடப்பதால் மெரீனா கடற்கரையில் பலத்த காற்று வீசி வருகிறது. ஆபத்தை உணராமல் ஏராளமானோர் பண்டிகை நாட்களைப் போல குவிந்து வருகின்றனர்.
சென்னை: நாங்க எல்லாம் சுனாமியிலேயே ஸ்விமிங் பண்ணவங்க... இது மெரீனாவிற்கு வந்துள்ள பலரது கருத்தாக உள்ளது. கடற்கரையில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியிருந்தாலும் ஏராளமானோர் ஆபத்தை உணராமல் தண்ணீரில் குதித்து விளையாடி வருகின்றனர். பலத்த காற்று வீசினாலும் ஜாலியாக இருப்பதாக கடற்கரைக்கு வந்துள்ளவர்களின் கருத்தாக உள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் 15 மணிநேரமாக விடாமல் மழை கொட்டி வருகிறது. ஆவடி, அண்ணாநகர் முதல் தென்பகுதியான வேளச்சேரி வரையும் வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையின் புறநகர் பகுதிகள் மழைநீரில் மூழ்கிவிட்டன.
மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கிப்போட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வெளியே வர முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கடைகள் மூடப்பட்டுள்ளன. காய்கறிகளின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.

தட்டி தூக்கும் காற்று
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடப்பதால் சென்னையிலும் புறநகர்ப்பகுதிகளிலும் பலத்த காற்று வீசுகிறது. மரங்கள் அனைத்தும் பேயாட்டம் போட்டு வருகின்றன. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

சத்தத்துடன் காற்று
மெரீனா கடற்கரையில் பலத்த சத்தத்துடன் காற்று வீசி வருகிறது. மணலோடு காற்றும் வீசி வருவதால் வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள நிலையில் இன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரை பகுதியில் குவிந்துள்ளனர்.

காற்றை அனுபவிக்க குவிந்த கூட்டம்
பொதுவாக தை மாதம் காணும்பொங்கல் நாளிலும் விடுமுறை நாளிலும்தான் ஏராளமானோர் மெரீனா கடற்கரைக்கு வருவது வழக்கம். இன்றைய தினம் காவல்துறையினர், அதிகாரிகளின் எச்சரிக்கையையும் புறக்கணித்து விட்டு கடற்கரையில் குவிந்துள்ளனர். காற்று வீசுவது பார்ப்பதற்கு நன்றாக இருப்பதாக பலரும் கூறியுள்ளனர்.

ஜாலி விளையாட்டு
கடலில் குளிப்பது போலவே தேங்கி நிற்கும் நீரில், சிறுவர்கள் குதித்து விளையாடிவருகின்றனர் காவல்துறையினர் எச்சரித்தும் பொதுமக்கள் தொடர்ந்து வருகை தருவதால் அப்பகுதி பண்டிகை நாட்களை போலவே உள்ளது. மெரீனாவிற்கு வந்து காற்றை அனுபவிப்பது ஜாலியாக இருப்பதாகவும் மழையால் வீட்டிற்குள் அடைந்து கிடந்த தங்களுக்கு இது உற்சாகத்தைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார். சுனாமி வந்த போது ஸ்விம்மிங் செய்தவங்க சென்னைக்காரங்க என்றும் கூறிக்கொண்டிருக்கின்றனர் கடற்கரையில் குவிந்தவர்கள்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications