ஒலிம்பிக் வீராங்கனை வந்தனாவை ஜாதி ரீதியாக இழிவுபடுத்தி அவமதிப்பதா? சு.வெங்கடேசன் எம்.பி. கொந்தளிப்பு
சென்னை: ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் அபாரமாக ஆடி அனைவரது பெருமதிப்பையும் பெற்ற வீராங்கனை வந்தனா கட்டாரியாவை ஆதிக்க ஜாதி கும்பல் ஜாதிரீதியாக இழிவுபடுத்தி அவமானப்படுத்தி இருப்பதற்கு லோக்சபா எம்.பி. சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகளுக்கு தலா ரூ1 கோடி பரிசுத் தொகை வழங்க வேண்டும் என்றும் வெங்கடேசன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
வந்தனா கட்டாரியா... ஒலிம்பிக்கில் அவர் ஆடிய ஆட்டம்- ஹாட்ரிக் கோல் அடித்த தருணங்கள்... இந்திய மகளிர் ஹாக்கி அணி மீது மகத்தான நம்பிக்கையை தேசத்துக்கு ஏற்படுத்தியதில் முதன்மையானவர்.
ஒட்டுமொத்த உலகமும் வந்தனா உள்ளிட்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகளின் விஸ்வரூபத்தை கண்டு பெருமிதப்பட்ட நேரத்தில் பேரவலத்தை இந்திய மண்ணில் சில தேசவிரோதிகள் நிகழ்த்தினர். ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கி அணி தோற்ற நேரத்தில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் அருகே உள்ள வந்தனா கட்டாரியா வீடு முன்பாக தேசவிரோதிகள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். அத்துடன் வந்தனா கட்டாரியா குடும்பத்தினரை பார்த்து ஜாதி ரீதியாக இழிசொற்களால் அவமானப்படுத்தினர். தலித்துகள் அதிகமாக இருப்பதால்தான் இந்திய அணி தோற்றது; விளையாட்டு போட்டிகளில் இருந்து தலித்துகளை விரட்டுங்கள் என ஆங்கார கூச்சலிட்டனர். இப்படி கூச்சல் போட்டவர்களில் 2 பேர் ஹாக்கி வீரர்கள். தங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த வந்தனா கட்டாரியாவுக்கு கிடைத்துவிட்டதே என்கிற சுயவெறுப்பின் அதி உச்சம் அது.

சு. வெங்கடேசன் எம்.பி.
இந்த கொடூர நிகழ்வு ஒட்டுமொத்த தேசத்தையே தலைகுனிய வைத்திருக்கிறது. நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய தேசவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனை வலியுறுத்தி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூருக்கு லோக்சபா எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: டோக்யோ ஒலிம்பிக்கில் அரை இறுதி ஆட்டம் வரை அழைத்து சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் உறுப்பினர் வந்தனா கட்டாரியா வீட்டின் முன்பு சாதி இந்துக்கள் அநாகரிக நடனம்... பட்டாசு வெடிப்பு... அணியில் அதிகம் தலித்துகள் என்பதால் அரை இறுதி ஆட்டத்தில் தோல்வி என சாதி ரீதியான வசவுகள்... எல்லா விளையாட்டுகளில் இருந்தும் தலித்துகளை வெளியே அனுப்ப வேண்டுமென்று கூச்சல்...

இந்தியாவின் செல்ல மகள்
உத்தரகாண்ட் மாநிலம், அரித்துவார் ரோஷனாபாத் என்ற கிராமத்தில் இந்தியாவின் செல்ல மகள் வந்தனா குடும்பத்தினருக்கு இழைக்கப்பட்ட அநீதி... இதே போட்டியில் மூன்று முறை தங்கம் வென்ற முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இதே அணிதான்... கால் இறுதி போட்டிக்கு இந்தியாவை தகுதியாக்கிய தென் ஆப்ரிக்காவுடனான போட்டியில் ஹாட் ட்ரிக் கோல் அடித்து சாதனை புரிந்து வெற்றிக்கு பங்களித்தது வந்தனாதான்... உலகம் முழுவதுமுள்ள மக்கள் குறிப்பாக விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் இந்தியாவின் மதிப்பை குறைத்துள்ளது... தேசத்திற்காக விளையாடும் பெருமை மிக்க வீரர்கள் மனதை இரணமாக்கியுள்ளது.

வீராங்கனைகளின் பின்னணி
ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சரே... விரைந்து அவமானத்தை சரி செய்யுங்கள்... நம்பிக்கையை விதையுங்கள்... இம்முறை இந்திய பெண்கள் ஹாக்கி அணி நாடு முழுக்க பெரும் எழுச்சியை உருவாக்கியது. இந்த எழுச்சியை உருவாக்கிய பெண்கள், மிக எளிய பின்னணியிலிருந்து வந்தவர்கள். வேளாண் குடும்பம், வீட்டில் மகள் ஆடுவதை பார்க்க சரியாக ஒரு தொலைகாட்சி கூட இல்லாத குடும்பம், போட்டிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தந்தையை இழந்த ஒரு வீராங்கனை, குடிக்கு அடிமையான தந்தை தந்த மனவுளைச்சலை மீறி டோக்கியோவில் வெற்றியை நிலை நாட்டிய இன்னொரு வீராங்கனை என்று இவர்களது கதைகளை கேட்க கேட்க நெஞ்சு விம்முகிறது. இந்த வீராங்கனைகளை நாம் சரியாகதான் கொண்டாடுகிறோமா என்கிற சந்தேகம் எழுகிறது. தேசம் கொண்டாடுகிறது. மக்கள் கொண்டாடுகிறார்கள். அரசு?

ரூ1 கோடி பரிசு அறிவியுங்க..
அந்த அணியின் ஒவ்வொரு உறுப்பினரும் அரசால் பெருமை செய்யப்பட்டு உற்சாகப்படுத்தப்பட வேண்டும். அரசு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ 1 கோடி சிறப்பு பரிசை அறிவிக்க வேண்டும். குற்றவாளிகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரகாண்ட் மாநில முதல்வருக்கு கடிதம் எழுதுங்கள்...நாடு திரும்பும் இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு பெரிய பாராட்டு விழா நடத்துங்கள். வந்தனா வீட்டிற்கு நீங்களே நேரில் சென்று தேசம் உன் பின்னால் முழுமையாக நிற்கிறது என்று சொல்லுங்கள்... என எனது கடிதத்தில் தெரிவித்துள்ளேன். வந்தனாவுக்கு நீதி கிடைக்க எல்லோரின் குரலும் ஒரு சேர எழும்பட்டும்! இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications