சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலா, வந்தே ‘இந்தி’ ரயிலா? - கொந்தளித்த சு.வெங்கடேசன் எம்பி
சென்னை: வந்தே பாரத் ரயிலுக்கு இந்தி தெரிந்த ஓட்டுநர்களை மட்டுமே நியமிக்கும் முடிவுக்கு சு.வெங்கடேசன் எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி கூறியிருப்பதாவது: சீனியர் லோகோ பைலட்களையே புதிய ரயில் துவங்கும் போது பணியமர்த்துவது வழக்கம். ஆனால் பிரதமர் பங்கேற்கும் சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயிலுக்கு அந்த வழக்கத்தை மாற்றி இந்தி தெரிந்த ஓட்டுநர்களை பணியமர்த்த ரயில்வே நிர்வாகம் உத்தரவு. இந்தி தெரியாத காரணத்தால் சீனியர் லோகோ பைலட்கள் புறக்கணிப்பு. சென்னை இரயில்வே கோட்டத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்தி திணிப்பு உத்தரவை ரத்து செய்க. இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி பதிவிட்டுள்ளார்.

சு.வெங்கடேசன் எம்பியின் இந்த பதிவில் நெட்டிசன்கள் தொடர்ந்து பல்வேறு கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். Nma Kader Kadayanallur என்பவர், ஒட்டுமொத்த தமிழர்களும் அரசியலை கடந்து இதை எதிர்க்க வேண்டும் இல்லையென்றால் எல்லாவற்றிலும் இது போன்று இந்தி திணிக்கப்படும் என கூறியுள்ளார். Velmurugan K என்ற நெட்டிசன், ஏற்கனவே ஓடும் இரயில்கள் தாமதம் இல்லாமல் இயக்க நடவடிக்கை தேவை குறிப்பாக தென்மாவட்டம் செல்லும் இரயில்கள் மதுரைக்கு சரியான நேரத்திற்கு வந்து மிக தாதமாகவே அனுப்பப்படுகிறது. இது தினசரி வாடிக்கை அதை சரிசெய்ய நடவடிக்கை தேவை என குறிப்பிடுகிறார். Hussain Naaz என்ற நெட்டிசன், நாடாளுமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications