ஆளுநர் ரவியின் சர்ச்சை பேச்சு! கார்ல் மார்க்ஸ் குறித்து கடும் விமர்சனம்- சு.வெங்கடேசன் கண்டனம்!
கார்ல் மார்க்ஸ் குறித்த ஆளுநர் ரவியின் பேச்சுக்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் இடதுசாரி சித்தாந்தத்தை உருவாக்கிய கார்ல் மார்க்ஸ் மீதான கடும் விமர்சனங்கள் மீண்டும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு இடதுசாரி எம்.பி. சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பேசும் கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம். சனாதன தர்மம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசி வருகிறார். திருக்குறள் மொழி பெயர்ப்பு விவகாரத்தில் ஜியு போப்பை கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாடு பெயர் குறித்த ஆளுநரின் கருத்து இன்றளவும் சர்ச்சையாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை ராஜ்பவனில் இந்துத்துவா கோட்பாட்டாளர் தீன்தயாள் உபாத்யாயா சிந்தனைச் சிதறல்கள், தீன்தயாள் உபாத்யாயா ஒருங்கிணைந்த மனிதநேயம் ஆகிய தலைப்பிலான நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய ஆளுநர் ரவி, சனாதன தர்மம் என்பது விரிவானது. கனியன் பூங்குன்றனாரின் புறநானூறில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தர்மம் என்பதை நாம் மதம் என புரிந்து கொண்டுவிட்டோம். அப்படி புரிந்து கொண்டதால் மாபெரும் தவறு செய்துவிட்டோம் என்றார்.

மேலும், நமது இந்திய கொள்கைகள் மேற்கத்திய சிந்தனையை தொடர்ந்ததாக இருந்தது. டார்வினின் கோட்பாடும் , மார்க்ஸின் சித்தாந்தம், இறையியல், ரூசோ கோட்பாடு என்பவை எல்லாம் இந்தியாவின் தேசியத்துவ வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தின. இந்தியாவை கார்ல் மார்க்ஸின் சிந்தனை சிதைத்துப் போட்டது. ஆனால் அந்த சிந்தனை இப்போது புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்றும் ஆளுநர் ரவி கூறினார்.
மார்க்ஸின் சித்தாந்தமானது இல்லாதவர்கள் மேலே உயர வேண்டும் என்கிறது. இது இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான மோதலை உருவாக்குகிறது. இது சமூகத்தில் பிளவுகளுக்கு காரணமாகவும் நிரந்தரமான மோதலையும் உருவாக்கக் கூடியது என்றும் விமர்சித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

அதேபோல, ஜனநாயகத்துக்கு உதாரணமாக ஆபிரகாம் லிங்கனை காட்டுகிற போக்கு இருக்கிறது. டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை பின்பற்றுகிறார்கள். இவை அனைத்துமே நமது மேற்கத்திய அடிமை நிலையின் வெளிப்பாடுதான். இந்திய பேராசிரியர்கள் ஐரோப்பிய தத்துவத்தை உயர்ந்ததாக தூக்கிப் பிடிப்பது வேதனைக்குரியது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார்.

ஆளுநர் ரவியின் இந்தப் பேச்சு இப்போது சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக இடதுசாரி எம்பி சு.வெங்கடேசன் அளித்துள்ள பதில்: ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களே! ஹிட்லர், முசோலினி, மனு, கோல்வால்கர், கோட்சே போன்றவர்களின் கருத்துக்கு அடிமை என்பதில் சிலருக்கு வெட்கம் இல்லாத போது... புத்தர், வள்ளுவர், மார்க்ஸ், லிங்கன், டார்வின், அம்பேத்கர், பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதில் எங்களுக்கு பெருமை தான். இவ்வாறு வெங்கடேசன் எம்பி கூறியுள்ளார். இதேபோல் சமூக வலைதளங்களில் ஆளுநர் ரவியின் மார்க்ஸ் விமர்சனத்துக்கு எதிரான கண்டனங்கள் பகிரப்படுகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications