யாருங்க பிரிவினைவாதி? ஜல்லிக்கட்டை முன்வைத்து நிர்மலா சீதாராமனுடன் சு.வெங்கடேசன் மல்லுக்கட்டு!
சென்னை: ஜல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவுதல் தொடர்பான மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு சர்ச்சையாகி இருக்கிறது. இதற்கு சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பும் தெரிவித்து பதிலடி தந்துள்ளார்.
ஜல்லிக்கட்டை முன்வைத்து @tskrishnan என்ற நெட்டிசன் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். சங்க இலக்கிய பாடல்களை மேற்கோள் காட்டி @tskrishnan இப்பதிவு வெளியிட்டிருந்தார். அப்பதிவில் @tskrishnan கூறியிருந்தாவது: ஜல்லிக்கட்டு சீசன் ஆரம்பித்துவிட்டது.

நெட்டிசன் பதிவு: பொங்கலைப் போலவே ஜல்லிக்கட்டும் ஹிந்து சமயத்தைச் சேர்ந்த வீர விழாவாகும். சங்க இலக்கியமான கலித்தொகை, ஜல்லிக்கட்டுக் காளைகளோடு நமது கடவுள்களை ஒப்பிட்டு ஒரு பாடல் மூலம் அழகாக வர்ணிக்கிறது. அதைப் பார்ப்போம் (பாடல் 104).
ஜல்லிக்கட்டு அரங்கத்தில் ஒவ்வொரு காளையாக வருகிறது. முதலில் வெள்ளை நிறக் காளை.
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக்கொடிப்
பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்,
வானைத் தொட்டுவிடுவதுபோல் உயர்ந்த பனைக் கொடியை உடைய பலராமன் போல வெள்ளை நிறத்தோடு இருக்கிறதாம் அந்தக் காளை
அடுத்து வருவது
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித்
திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும்
போரில் வெற்றி தரக்கூடிய சக்கரப்படையைத் தாங்கியவனும் திருமகளை மார்பில் கொண்டவனுமான திருமாலின் நிறத்தை உடைய கருமை நிறக் காளை
அடுத்து
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்,
பொன்னைப் போன்று ஒளிரக்கூடிய, நெற்றியில் பிறையைத் தாங்கிய முக்கண்ணனான சிவபெருமானைப் போன்ற குரால் காளை
அடுத்ததாக சிவப்பு நிறமுடைய செவலைக் காளை வருகிறது
மா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர்
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும்,
மாமரமாக நின்ற சூரனைக் கடல் கலங்குமாறு வேலால் ஆட்கொண்ட முருகப்பெருமானைப் போல சிவந்த நிறமாக அந்தக் காளை இருக்கிறதாம்
அப்படிக் காளைகள் உள்ளே வந்ததும் அவற்றை அடக்க வீரர்கள் போராடியது எப்படி இருந்தது ?
கோடு இடை நுழைபவர், கோள் சாற்றுபவரொடு
புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல்வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும்
நூறு கௌரவர்களோடு ஐந்து பாண்டவர்கள் போராடியது போல அது இருந்ததாம்.
Drawing references from a Sangam period literary work, Kalithogai, scholar @tskrishnan shows how the performing bulls were each compared to the skin tone of Gods such as Balarama, Srikrishna, Mahadeva, and Subramanya/Muruga. #Jallikattu #Sangam #SanatanaDharma https://t.co/o3djl0P83f
— Nirmala Sitharaman (@nsitharaman) January 16, 2024
நிர்மலா சீதாராமன் கருத்து: நெட்டிசன் @tskrishnan -ன் இந்தப் பதிவை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது எக்ஸ் பக்கத்தி பகிர்ந்து ஒரு பதிவிட்டிருந்தார். அதில், "சங்க கால தமிழ் இலக்கியமான கலித்தொகையில் ஏறு தழுவுதலில் பங்கேற்கும் காளைகள் சிவன், முருகன், பலராமன், கிருஷ்ணன் ஆகிய தெய்வங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளன. அந்த கால மக்களின் வாழ்க்கையை இன்று வேறுவிதமாக காட்டுவது தீய உள்நோக்கம் மற்றும் பிரிவினைவாத நோக்கம் கொண்டது" எனவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார்.
ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) January 17, 2024
"தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம்" என @nsitharaman
கூறுகிறார்.
உலகம் அதிர உரக்கச்சொல்வோம்...
கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை “தமிழும் திமிலும்” எமது பேரடையாளம்.#jallikattu… pic.twitter.com/BFbrA3HtcY
வெங்கடேசன் எம்பி பதிலடி: இதற்கு சிபிஎம் எம்பி மதுரை சு.வெங்கடேசன் அளித்துள்ள பதில்: ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம். "தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம்" என @nsitharaman (நிர்மலா சீதாராமன்) கூறுகிறார். உலகம் அதிர உரக்கச்சொல்வோம்... கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை "தமிழும் திமிலும்" எமது பேரடையாளம். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications