Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரைக்கு மேலும் மணிமகுடம்.. உலக அரங்கில் பெருமை சேர்ந்த “4 பேர்” - மனதார வாழ்த்திய சு.வெங்கடேசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகளவில் சிறந்த 2% கண் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் மதுரை அர்விந்த் கண் மருத்துவமனையை சேர்ந்த 4 மருத்துவர்கள் இடம்பெற்றது மதுரைக்கு மேலும் மணிமகுடங்களை சேர்த்து உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்து இருக்கிறார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரத்தில் அமைந்து இருக்கும் உலக புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஸ்டான்ஃபோர்ட். இந்த பல்கலைக்கழகம் அண்மையில் ஒரு தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

2021 ஆண்டுக்கான உலக கண் மருத்துவ ஆராய்ச்சியாளர்களில் தலைசிறந்து விளங்கும் 2 சதவீதம் பேரின் தரவரிசை பட்டியல்தான் அது. அதில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் 25 மருத்துவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்களும் இடம்பெற்று இருக்கின்றனர்.

இந்தியர்கள் அதிகம்

இந்தியர்கள் அதிகம்

ஸ்டான்போர்ட் வெளியிட்ட அந்த தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் முதலிடத்தில் சந்தோஷ் ஹொனவர், 2 வது இடத்தில் பிலிப் தாமஸ் ஆகியோரும் 3 வது இடத்தில் விரேந்தர் சங்வான், 4 வது இடத்தில் ரோகித் ஷெட்டி, 5 வது இடத்தில் முத்தையா ஸ்ரீனிவாசன், 6 வது இடத்தில் மருத்துவர் முஹம்மது ஜாவித் அலி ஆகியோரும் இடம்பிடித்து இருக்கின்றனர்.

25 பேர்

25 பேர்

7 வது இடத்தில் சாவித்ரி ஷர்மா, 8 வது இடத்தில் அமோத் குப்தா, 9 வது இடத்தில் விஷாலி குப்தா, 10 வது இடத்தில் மருத்துவர் வினோத் குமார் ஆகியோரும் 11 வது இடத்தில் நம்ரதா ஷர்மா, 12 வது இடத்தில் பிரஷாந்த் கார்க், 13 வது இடத்தில் ஜில் கீஃபீ, 14 வது இடத்தில் குல்லபல்லி ராவ் ஆகியோரும் இடம்பிடித்து உள்ளார்கள்.

மதுரை மருத்துவர்கள்

மதுரை மருத்துவர்கள்

15 வது இடத்தில் சுவாதி கலிகி, 16 வது இடத்தில் ரோகித் கன்னா, 17 வது இடத்தில் லலிதா பிராசன்னா, 18 வது இடத்தில் ரத்தினம் சிவக்குமார், 19 வது இடத்தில் ஜோதிர்மே பிஸ்வாஸ், 20 வது இடத்தில் மிட்டனமல்லி ஸ்ரீதர், 21 அக்‌ஷய் கோபிநாதன் நாயர், 22ல் ராஜீவ் ராமன், 23ல் வெங்கடேஷ் பிரச்சன்னா, 24ல் சூசன் ஜேக்கப், 25ல் ரோகித் சக்சேனா ஆகியோர் உள்ளனர்.

சு.வெங்கடேசன் வாழ்த்து

சு.வெங்கடேசன் வாழ்த்து

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மார்க்சிஸ்டு எம்பி சு.வெங்கடேசன், "உலகின் தலைசிறந்த ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் உலகின் முதன்மையான, சிறந்த 2 சதவீத கண் மருத்துவ ஆய்வாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் 25 கண் மருத்துவர்களில் நால்வர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்தவர்கள்.

மணிமகுடங்கள்

மணிமகுடங்கள்

மதுரைக்கு மேலும் மணிமகுடங்கள் சேர்த்து உள்ளது அரவிந்த் கண் மருத்துவமனை. மரு. ஸ்ரீனிவாசன், மரு. ரத்தினம் சிவகுமார், மரு. வெங்கடேஷ் பிரசன்னா, மரு.லலிதா பிரசன்னா ஆகிய நால்வருக்கும் என் அன்பு வாழ்த்துகள்." என்று குறிப்பிட்டுள்ளார். சு.வெங்கடேசனின் ட்விட்டர் பதிவை தொடர்ந்து மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+