சார் பதிவாளர் அலுவலகம்.. பத்திரப்பதிவு செய்ய போறீங்களா.. லிஸ்ட்டில் திடீர் மாற்றம்.. தமிழக அரசு மாஸ்
சென்னை: பத்திரப்பதிவு முறைகளில் பொதுமக்களின் வசதிக்காக, எத்தனையோ மாற்றங்களும், அறிவிப்புகளும் செய்யப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், இப்போதும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக, பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது... குறிப்பாக, தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன்மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை.

ஜஸ்ட் 15 நிமிடத்திற்குள்ளேயே பதிவு பணிகள் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.. பத்திரப்பதிவிற்கு வரும்போது, பொதுமக்கள் கையில் பணம் எடுத்துவரவும் தேவையில்லை..
மேலும், போலிப் பத்திரப்பதிவும் மெல்ல நீங்கிவருகிறது.. போலி பத்திரப்பதிவு புதிய சட்டத்தின்படி, இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட போலிப்பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன...
பத்திரப்பதிவு: அதேபோல, ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் ஆகியோர் சார்-பதிவாளர், பதிவாளர் அலுவலகங்களுக்குள் வரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லாமே இப்போது ஆன்லைன் வழியாக பதிவு செய்யப்படுகிறது. இடத்தை வாங்குபவரும், விற்பவரும் பணத்தை பத்திரப்பதிவு அலுவலத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை.
நாளுக்கு நாள், இப்படி பொதுமக்களின் நன்மைக்காகவே அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துவரும் நிலையில், அடுத்த அதிரடியை கிளப்பிவிட்டுள்ளது.. அதாவது, தமிழகத்தில், 100 சார் -பதிவாளர் அலுவலகங்கள், சனிக்கிழமைகளில் செயல்பட்டு வருகின்றன..
2 திட்டங்கள்: அதேபோல, பொதுமக்கள் வரிசையில் காத்திருக்காமல் பத்திரப்பதிவு செய்வதற்கான, "தட்கல்" திட்டமும், கடந்த 2022 முதல் கொண்டுவரப்பட்டது.. இந்த 2 திட்டங்களுக்காக மண்டல வாரியாக, 100 சார் - பதிவாளர் அலுவலகங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில், சில அலுவலகங்களில் எதிர்பார்த்த அளவுக்கு, சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு நடப்பதில்லை. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில், "நடப்பு நிதியாண்டில், ஏப்ரல், 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலத்தில், பதிவான பத்திரங்கள் எண்ணிக்கை அடிப்படையில், 100 அலுவலகங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, புதிய லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டுமே கூடுதல்கட்டணம் செலுத்தி, வரிசையில் நிற்காமல், தட்கல் முறையில் உடனடி பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியும்..
சனிக்கிழமைகள்: அதேசமயம், எந்தெந்த அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படும் என்பதை, அந்தந்த பகுதியில் உள்ள ஆவண எழுத்தர்கள் உள்ளிட்டோருக்கு, சார் - பதிவாளர்கள் தெரிவிக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications