தென்காசியில் உட்கார சேர் இல்லயா? சார் பதிவாளர் ஆபீஸ்ல இப்படி? பதிவுத்துறையிடம் பர்மிஷன் கேட்ட பெயிரா
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுவதும் இருக்கிற 587 சார் பதிவாளர் அலுவலகங்களில் எந்தெந்த அலுவலகங்களில், பொதுமக்களுக்கு தேவையான அமரும் இருக்கைகள் மற்றும் மேஜைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் இல்லையோ, அந்த அலுவலகங்களில் எல்லாம் அடிப்படை கட்டமைப்புகளை பதிவுத்துறை உருவாக்கி தர வேண்டும் என்று பெயிரா அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஹென்றி, தமிழ்நாடு பதிவுத்துறை தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகங்கள் குறித்த நிலைமையை விவரித்துள்ளார்.. அதில் உள்ளதாவது:
"புதியதாக நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரித்து கடந்த 2019 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட முக்கிய மாவட்ட தலைமை பதிவு அலுவலகமான தென்காசி சார்பதிவாளர் இணை ஒன்று மற்றும் இணை இரண்டு ஆகிய பதிவு அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்கிறார்கள்.

அடிப்படை வசதிகள் இல்லை
ஆனால், எவரும் அங்கே அமர்வதற்கு உரிய இருக்கைகளோ, அல்லது பதிவுக்கு தாக்கல் செய்ய கொண்டுவரும் ஆவணங்களில் கையெழுத்திட மேஜையோ போதிய அடிப்படை வசதியோ இல்லாமல், அனைவரும் தரையில் அமர்ந்து தான் கையெழுத்திடும் அவல நிலை தற்போது அங்கு உள்ளது.
இதுபோன்று தமிழகம் முழுவதும் இருக்கிற 587 சார் பதிவாளர் அலுவலகங்களில் எந்தெந்த அலுவலகங்களில் எல்லாம் போது மக்களுக்கு தேவையான அமரும் இருக்கைகள் மற்றும் மேஜைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் இல்லையோ அந்த அலுவலகங்களில் எல்லாம் அடிப்படை கட்டமைப்புகளை பதிவுத்துறை உருவாக்கி தர வேண்டும் எனவும், இப்படிப்பட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் டிஜிட்டல் இந்தியாவில் நவீன காலத்தில் இல்லாதது மாபெரும் வேதனைக்குரிய அவலம்.
அடிப்படை கட்டமைப்புகள்
பதிவுத்துறை தலைமை இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, உடனடியாக தகுந்த தீர்வினை ஏற்படுத்தி தர வேண்டும்..
இல்லையெனில் மேற்கண்ட தென்காசி பதிவு அலுவலகங்களுக்கு ஆவணங்களை பதிவு செய்ய வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான அமரும் இருக்கைகள் மற்றும் மேஜைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை எமது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் உடனடியாக தென்காசி பதிவு அலுவலகத்திலும் மற்றும் மாநிலம் முழுவதும் தேவையான அலுவலகத்தில் அமைப்பதற்கு, தமிழ்நாடு பதிவுத்துறை உரிய வழிவகை செய்து அதற்கான அனுமதியை வழங்கிட வேண்டும்.
அனுமதி தேவை
தென்காசி மாவட்டம் என்றில்லை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற அடிப்படை வசதிகள் குறைபாடுகள் குறித்த பிரச்சனைகள் நிலவுகின்றன.. எனவே, தமிழக பதிவுத்துறை அனுமதி அளிக்கும்பட்சத்தில், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை, குறைபாடுகள் நிலவும் பகுதிகளில் ஏற்படுத்தி தர பெயிரா தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்" என்று பெயிரா கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஹென்றி கேட்டுக் கொண்டுள்ளார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications