அதிகாலையே எழுந்து வந்த வீரர்.. ஆகா செம.. சிக்னலே நல்லா இருக்கே.. இந்திய அணியில் வீரர் தூக்கியடிப்பு?
இந்திய டெஸ்ட் அணியில் கடந்த 20 வருடங்களில் இவர் அளவிற்கு மோசமாக யாரும் ஆடவில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 3வது போட்டிக்கான இந்திய டெஸ்ட் அணியில் முக்கியமான ஒரு மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் முக்கியமான வீரர் ஒருவர் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி மிக எளிதாக வென்றது.
இரண்டு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் மார்ச் 1ம் தேதி நடக்க உள்ளது. இந்தூர் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டிக்காக இந்திய அணியில் பயிற்சியில் இறங்கி உள்ளது.

பயிற்சி
இந்த நிலையில்தான் இந்திய அணியில் ஆடும் லெவனில் இருந்து கே எல் ராகுல் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் இரண்டாவது டெஸ்டில் கே.எல் ராகுல் முதல் இன்னிங்சில் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்சில் கே. எல் ராகுல் மீண்டும் சொதப்பி வெறும் 1 மட்டுமே எடுத்தார். முதல்வதாக நடந்த நாக்பூர் டெஸ்டில் இவர் முதல் இன்னிங்சில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்திய அணியில் எந்த பார்மட்டில் சரியாக ஆடாத கே. எல் ராகுலை அணியில் இருந்தே நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுவாக வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக இன்றைய மேட்சில் அவர் ஆடிய விதம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

மோசமான பார்ம்
கடந்த 2017ல் இருந்து 49 டெஸ்ட் போட்டிகளில் கே. எல் ராகுல் ஆடி இருக்கிறார். இதில் 25 ஆவரேஜ் மட்டுமே வைத்துள்ளார். இந்திய அணியில் இவ்வளவு குறைவான ஆவரேஜ் வைத்திருக்கும் டெஸ்ட் வீரர்களுக்கு எல்லாம் வாய்ப்பே கொடுக்கப்படாது. ஆனால் கே. எல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த 20 வருடத்தில் இவ்வளவு குறைவான ஆவரேஜ் கொண்ட ஒப்பனர் இந்திய அணியில் இருந்ததே இல்லை. 2, 10, 23, 22, 10, 12, 8, 10, 2 இதுதான் இந்த தொடருக்கு முன்பாக கடைசியாக 9 டெஸ்ட் போட்டிகளில் கே எல் ராகுல் எடுத்த ரன்கள். இப்படி ஒரு வீரருக்குத்தான் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

நீக்கம்
வாய்ப்பு வழங்குவதோடு இல்லாமல் இவருக்கு துணை கேப்டன் பொறுப்பையும் இந்திய அணி வழங்குவதுதான் மிகப்பெரிய காமெடியாக உள்ளது. இந்த நிலையில்தான் கே எல் ராகுல் துணை கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டார். இதையடுத்தே தற்போது இந்திய அணியில் எதிர்பார்த்தபடியே சுப்மான் கில் களமிறக்கபப்டுவார் என்று கூறப்படுகிறது. சுப்மான் கில் சிறப்பான பார்மில் இருக்கிறார். அவர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். இந்த நிலையில்தான் இன்று இந்திய அணி பயிற்சியை தொடங்கியது. காலையில் 9 மணிக்கு இந்திய அணி பயிற்சியை மேற்கொள்ளும் முன் கில் முதல் ஆளாக பயிற்சி மேற்கொள்ள மைதானத்திற்கு வந்தார்.

அதிகாலை
அதிகாலையே அவர்தான் முதல் ஆளாக பயிற்சியை ஆரம்பித்தார். இன்று கே எல் ராகுல் பெரிதாக பேட்டிங் பயிற்சி செய்யவில்லை. ஏற்கனேவே கே எல் ராகுல் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்பதால் அவரின் நீக்கம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால் பெரும்பாலும் மார்ச் 1ம் தேதி கில் இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை ராகுலு மீண்டும் வாய்ப்பு வழங்க ஆசைப்பட்டால் அவரை மிடில் ஆர்டரில் இறக்கிவிட்டுவிட்டு ஸ்ரீகர் பரத்தை நீக்கிவிட வாய்ப்புகள் உள்ளன.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications