அவதூறு வழக்குக்காக அரசுப் பணம் விரயம்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சுப்ரமணியசாமி பாய்ச்சல்.!
சென்னை: அவதூறு வழக்குக்காக அரசுப் பணத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரயம் செய்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார் சுப்ரமணிய சாமி.
பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமிக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததோடு உரிய முகாந்திரம் இல்லாமல் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக ட்வீட் வெளியிட்டுள்ள சுப்ரமணியசாமி, தம் மீதான அவதூறு வழக்குக்காக செலவிடப்பட்ட அரசு நிதியை ஈடு செய்ய வைக்கும் வகையில் முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் மீது வழக்கு தொடர்வது குறித்து தனது வழக்கறிஞர் ரவியுடன் ஆலோசித்து வருவதாகக் கூறியுள்ளார்.
தன் மீதான 6 அவதூறு வழக்குகளுக்காக கொஞ்சம் கூட சிந்திக்காமல் அரசுப் பணத்தை தண்ணீரை போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செலவிட்டுள்ளதாக சாடியுள்ளார். முதலமைச்சர் மீதான சுப்ரமணியசாமியின் இந்த திடீர் பாய்ச்சலுக்கு காரணம் இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததே காரணமாகும்.

சுப்ரமணியசாமியை பொறுத்தவரை ஆரம்பம் முதலே சசிகலா ஆதரவு நிலைப்பாடு உடையவர் என்பது அனைவரும் அறிந்த விவகாரம். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் சசிகலா விடுதலையும் நடக்க உள்ளதால் மீண்டும் தமிழகத்தின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளார் சுப்ரமணியசாமி.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications