சீர்காழி சையது யாஸீன் மௌலானா தர்ஹா கந்தூரி விழா.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
சென்னை: இலங்கையில் பிறந்து, தமிழகத்தில் சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் அடக்கமாகி இருக்கும் ஜமாலிய்யா சையது யாஸீன் மௌலானா அவர்களின் 59ம் வது நினைவு தினம் கடந்த 6ம் தேதி அனுசரிக்கப்பட்டது. சையது யாஸீன் மௌலானா தர்ஹாவில் நடந்த இந்த கந்தூரி விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
யாஸீன் மௌலானா அவர்களின் இளைய மகன் கலீல் மவுலானா அல்ஹஸனி தலைமையில் மவுலூது, துஆக்கள் ஓதப்பட்டு, புனித மஜார் ஷரீஃபில் சந்தனம், மாலைகள், போர்வைகள் அணித்து உலக நலனுக்காக பிரார்த்தனை நடந்தது. நிகழ்வில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு பள்ளிவாசல் மண்டபத்திலும், தர்ஹா வாளாகத்திலும் இரவு விருந்து உபசரிக்கப்பட்டது.

யாஸீன் மவுலானா வாழ்க்கை சுருக்கம்: ஜமாலிய்யா செய்யித் யாஸீன் மெளலானா இருபதாம் நுாற்றாண்டில் இலங்கையில் வாழந்த மார்க்க அறிஞரும்,சூபி மகானும்,எழுத்தாளரும்,கவிஞரும் ஆவார்.இவர் இலங்கை மற்றும் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மற்றும் சமூக மறுலமர்ச்சிக்குப் பங்காற்றிய ஒருவராகக் கருதப்படுகின்றார்.
கி.பி.1899 (ஹிஜ்ரி-1386)இல் இலங்கையின் மாத்தறை மாவட்டத்தின் திக்குவல்லை நகரில் பிறந்தார். இவரது தந்தை ஜமாலிய்யா ஸெய்யித் முஹம்மது மௌலானா அல் ஹாஷிமிய் (ரஹ்), இவரது தாயார் செய்யிதா உம்மு ஹபீபா கண்ணே ஆவார். யாஸீன் மெளலானா அவர்களின் பெற்றோர் இறைத்துாதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 32ம் வழித்தோன்றலும் மற்றும் அஷ்செய்கு அப்துல் காதர் ஜீலானி(ரஹ்) அவர்களின் 19வது வழித்தோன்றலிலும் வந்தவர்கள் ஆவார்.
அஷ்செய்கு ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் முஹம்மத் மெளலானா அல் காதிரிய் ஈராக் நாட்டின் பக்தாத்தை சேரந்தவர். இவர் ஈராக் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பின் முதலில் இந்தியா பின்னர் இலங்கைக்கும் வந்தார். கி.பி.1951ல் மரணமடைந் இவர் தமிழ்நாட்டின் சம்பைப்பட்டிணத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
கல்வி: யாஸீன் மெளலானா தனது ஆரம்பக்கல்வியை வெலிகமை புஹாரி மத்ரஸாவிலும், மாத்தறையில் ஒரு கல்விக்கூடத்திலும் கற்றார். தனது தாயாரின் மறைவுக்கு பின்னர் 11வது வயதில் உயர் கல்விக்காக இந்தியா சென்றார்கள்.இந்தியாவின் மேலைப்பாலயத்தில் அமைந்துள்ள மஉனுல் அஸ்பியா கல்விக்கூடத்தில், யூசுப் வலீயுல்லாஹ்(ரஹ்) மற்றும் அஹ்மத் அலி (ரஹ்) ஆகியோரிடம் கற்றார்கள்.
மேலும், பலவரக்காட்டில் வாழ்ந்த மார்க்க மேதை அலவிய்யுல் ஜெமீலிய் (ரஹ்) அவர்களிடமும் கற்றார்கள்.பின்னர் லாஹுர் இஸ்லாமியக் கல்லுாரியில் உயர் கல்வி கற்று, மெளலவி பாஸில் பட்டம் பெற்றுக்கொண்டார்கள்.பின்னர் தேவ்பந்த் கல்விக்கூடத்தில் கற்று,மெளலவி பாஸிலே அஉலா பட்டம் பெற்றார்கள். தமிழ்நாட்டில் ஜமாலியா அரபு கல்லூரியிலும் சிறந்த உயர் பட்டத்தால் கவுரக்கபட்டார்.
யாஸீன் மெளலானா அவர்கள் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த காழி சதகதுல்லாஹில் காஹிரி அவர்களின் இரண்டாவது மகளை திருமணம் முடித்தார்கள்.தனது தந்தையின் உத்தரவின் பேரில் இலங்கையின் வெலிகம,வெலிபிட்டியைச் சேரந்த தாஸிம் மெளலானா அவர்களின் முதலாவது மகளையும் இலங்கையிலும் திருமணம் முடித்தார்கள்.
காதிரிய்யா சூபி வழியமைப்பின் கிளையான 'ஹக்கிய்யதுல் காதிரிய்யா' என்ற சூபி வழியமைப்பை தோற்றுவித்தவர் ஆவார்.
அலுத்காமம் ஜம்மியதுல் உலமாவின் தலைவராகவும்,அகில இலங்கை உலமா போர்ட் தலைவராகவும், முன்னால் இலங்கை அரசாங்க இலாகாவின் அரபுப் பரீட்சைப் பிரிவின் தலைவராகவும், அகில வெலிகமாம் முஸ்லிம் லீக் தலைவராகவும் யாஸீன் மெளலனா இருந்தார். இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றிய முக்கிய ஒருவராகக் கருதப்படுகின்ற அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் அவர்களுடன்,யாஸீன் மெளலானா அவர்கள் இணைந்து செயற்பட்டார். அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் அவர்கள் 'இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி(Ceylon Muslim Scholarship Fund)' எனும் நிதியத்தை ஆரம்பித்தார்.
இந்நியத்திற்கு உதவ வேண்டும் என பணம் படைத்தவர்களை ஊக்குவித்தோடு, இந்நிதியத்தை திறம்பட நடத்திச் செல்வதற்கு அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் அவர்களுக்கு, யாஸீன் மெளலான அவர்கள் உறுதுணையாக இருந்தார்கள். இலங்கை அரசாங்க மத்ரஸா புணர்நிர்மாண சங்கத்தின் (Madrasa Reorganization Committee) தலைவராகவும், ஆலோசகராகவும் பணியாற்றி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபுப் பிரிவின் அப்போதைய தலைவராக இருந்த பேராசிரியர் எஸ்.ஏ. இமாம் அவர்களுடன் இணைந்து அரபி கல்லுாரிகளுக்கான பாடத்திட்டத்தை அமைப்பதற்கும் பெரும் பங்காற்றினார்கள்.
ஒவ்வொரு வருடமும் தமது மாணவர்களை சந்திப்பதற்கு யாஸீன் மெளலானா அவர்கள் இந்தியா செல்வது வழக்கமாக இருந்தது. அவ்வகையில் 1966ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்றார். மாணவர்களை சந்தித்திட்டுவிட்டு திருமுல்லையில் உள்ள தமது வீட்டில் 1966ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி காலமானார்.
பங்களிப்புகள்: யாஸீன் மெளலானா பல தலைப்புக்களில், பல நுால்களை எழுதியுள்ளார். அரபு-தமிழ் காமூஸ் அகராதி, புகாரி ஷரீப் ஹதீஸ் நுாலுக்கான விளக்கவுரை, இரட்சண்ணிய பிரபந்தம், காமிலுக்கான விளக்கவுரை யவானிஉ அதுமாருந்நிஉமாஉ - (ஆன்மீக அனுபவங்களை விபரிக்கும் அரபு நூல்), கலிமா விருட்சக் கனிந்த கனி ஆகியவை அதில் சில.
பக்திப் பா மாலை: யாஸீன் மவுலானாவிற்கு பிறகு அவரது இளைய மகன் சைய்யது ஜமாலியா கலீல் அவுன் மவுலானா தந்தையின் தரீக்காவினை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றதோட அரபி சர்வகலாசாலை, உயர் பாடசாலை, அவ்னிய்யா உலக சமாதான அறக்கட்டளை ஆகியவற்றை நிறுவி சமூக நலப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications