இன்னும் உங்க ரேஷன் கார்ட்டை அரிசி கார்டாக மாற்றவில்லையா.. அவகாசம் கொடுத்திருக்கு தமிழக அரசு
சென்னை: சர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற இன்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் மேலும் 3 நாட்கள் அவகாசத்தை நீடித்தது அதாவது வரும் 29ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் கடந்த நவம்பர் 19ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பொது விநியோகத் திட்டத்தில் தற்பொழுது 10 லட்சத்து 19,491 ரேஷன் அட்டைகள் சர்க்கரை அட்டைகளாக உள்ளது.

இந்த ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய அட்டைகளை அரிசி பெறக்கூடிய ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, தமிழக முதல்வர் கீழ்க்கண்ட உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய ரேஷன் அட்டையின் நகலினை இணைத்து, 19.11.2019 முதல் 26.11.2019 வரை https://www.tnpds.gov.in/ என்ற இணைய முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம்.
அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாகப் பரிசீலனை செய்யப்பட்டு, சர்க்கரை ரேஷன் அட்டைகள், தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையல் இன்றுடன் சர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற அவகாசம் முடிகிறது. இந்த நிலையில் மேலும் 3 நாட்கள் அவகாசத்தை நீடித்தது அதாவது வரும் 29ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவேஇதுவரை சர்க்கரை கார்டுகளை அரசி கார்டுகளாக மாற்றாதவர்கள் இந்த மூன்று நாளில் மாற்றி பயன்பெறலாம்.


Click it and Unblock the Notifications
