சென்னையில் பலத்த காற்றுடன் மழை- தமிழகத்தின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த இடியுடன் கோடை மழை கொட்டியுள்ளது. சென்னையில் தற்போதும் கனமழை கொட்டி வருகிறது.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டவுன் அமலில் உள்ளது. ஆனாலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் இருந்து வருகிறது.

இதனால் 8 மாவட்டங்களில் இன்று முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் கோடைவெயில் வெளுத்து வாங்குகிறது.
இதனால் பகல் நேரங்களில் எந்த சாலைகளிலும் ஆள் நடமாட்டமே இல்லாத நிலைதான் இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய கனமழை கொட்டியது.
சென்னை நகரின் பல பகுதிகளிலும் மழை கொட்டியது. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோடையின் உக்கிரம் சற்றே தணிந்த நிலை காணப்ப்டுகிறது.
சென்னையில் தொடரும் மழை
சென்னை நகரில் தற்போதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. வெப்பச் சலனம் மற்றும் திடீர் மேகமூட்டத்தால் சென்னையில் கனமழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications