ஏ.ஆர். முருகதாஸ் வீட்டிற்கு சென்ற போலீஸ்... நள்ளிரவில் தீயாய் பரவிய கைது செய்தி!
Recommended Video

சென்னை : சர்கார் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கைது செய்யப்படப் போவதாக நள்ளிரவில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியன்று 'சர்கார் ' திரைப்படம்' வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே கதை தொடர்பாகப் பல சர்ச்சைகளை சந்தித்து பின் சுமூகமாக திரைப்படம் வெளியானது.
முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக சர்கார் உருவாகியுள்ளது. ஓட்டுரிமை, இலவசங்கள் வேண்டாம், அரசுத்துறைகளில் பொறுப்பற்ற முறையில் செயல்படும் அதிகாரிகளை செம வாங்கு வாங்கி இருக்கிறது சர்கார்.
[தணிக்கை செய்த படத்திற்கு எதிராக போராடுவதா... சட்டத்திற்கு புறம்பான செயல் என ரஜினி கண்டனம்!]

அதிமுகவினர் எதிர்ப்பு
அதிமுகவை மறைமுகமாக தாக்கும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளதாக அந்த கட்சியை சார்ந்த அமைச்சர்கள் சர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தில் இருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது இப்படியான ஒரு படத்தை எடுத்திருக்க வேண்டும் என்று அதிமுகவைச் சேர்ந்தவர்களும், ஜெயலலிதாவின் விஸ்வாசிகளும் கூறி வருகின்றனர்.

வெடித்த போராட்டம்
சர்கார் படத்திற்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக பற்ற வைத்த நெருப்பு நேற்று போராட்டம், பேனர் கிழிப்பு என்ற கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

நள்ளிரவு கைது பரபரப்பு
நேற்று மாலை முதல் இந்த பரபரப்பு ஓடிக்கொண்டிருக்க இரவு 11 மணியளவில் சர்கார் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய அவரது வீட்டிற்கு போலீஸ் விரைந்துள்ளதாக ஒரு ட்வீட்டை போட்டது. இந்த ட்வீட் மின்னல் வேகத்தில் பரவ ஊடகங்கள் சுறுசுறுப்பாகின.

முருகதாஸ் வீட்டிற்கு போன போலீஸ்
சாலிக்கிராமத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு ஊடகங்கள் படையெடுக்கத் தொடங்கின. முருகதாஸை கைது செய்வதாக வெளியான செய்தியை காவல்துறையினர் மறுத்தனர். வழக்கமான ரோந்து பணிக்காக சென்றதாகவே அவர்கள் கூறினர்.
|
ஓய்ந்த பரபரப்பு
இதனையடுத்து ஏ.ஆர். முருகதாஸ் பதிவிட்ட ட்வீட்டில் என்னுடைய வீட்டு வாசலிற்கு வந்து காவல்துறையினர் கதவைத் தட்டியுள்ளனர். நான் வீட்டில் இல்லை என்ற செய்தியை அறிந்து திரும்பிச் சென்றுள்ளனர் என்று குறிப்பிட்டு இருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனமும் போலீஸார் முருகதாஸ் வீட்டில் இல்லை என்பது தெரிந்தது திரும்பிச் சென்று விட்டதாக பதிவிட்டிருந்தனர். இதனையடுத்தே கைது பரபரப்பு ஓய்ந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications