விண்வெளிக்கு பகவத்கீதை கொண்டு சென்ற சுனிதா வில்லியம்ஸ்! அடடே இப்படி ஒரு காரணமா?
சென்னை: சர்வதேச விண்வெளியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக 9 நாள் பயணமாக விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 9 மாதங்களாக பூமிக்குத் திரும்ப முடியாமல் உள்ளனர். இந்நிலையில், அவர்களை பூமிக்குத் திரும்பி அழைத்து வருவதற்காக டிராகன் விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் சமோசா மற்றும் பகவத் கீதையை தன்னுடன் எடுத்துச் சென்றார். சமோசா, பகவத்கீதையை சுனிதா வில்லியம்ஸ் எடுத்துச் சென்றதற்கான சுவாரஸ்யமான காரணம் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க...
சர்வதேச விண்வெளி நிலையத்தை நாசா அமைத்துள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதற்காக இந்த விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்த விண்வெளி நிலையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலமாக 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் ஒன்பது நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டுவிட்டு பூமிக்குத் திரும்பவிருந்தார். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. கோளாறுகளை சரிசெய்ய முயன்றும் தோல்வியே ஏற்பட்டது. இதனால் கடந்த 9 மாதங்களாக விண்வெளி நிலையத்திலேயே அவர்கள் இருவரும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தற்போது அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ டிராகன் 9 என்ற விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விண்கலம் கடந்த சனிக்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டது. இந்த டிராகன் விண்கலம் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது.
இந்த விண்கலனில்தான் சுனிதா மற்றும் வில்மோர் திரும்பவுள்ளனர். இன்று நள்ளிரவுக்கு மேல் டிராகன் விண்கலம் பூமியை வந்தடையும் என்று எதிர்பார்த்து வருகின்றனர். சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படும் காட்சி, பூமிக்கு வந்து சேரும் காட்சிகளை நேரலையாக ஒளிபரப்ப நாசா ஏற்பாடு செய்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குச் செல்லும்போது கடந்த காலத்தில் பகவத் கீதை மற்றும் சமோசாவை தன்னோடு எடுத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் பெரும் விவாதப்பொருளாக மாறியது. அவர் விநாயகர் சிலையையும் தன்னுடன் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுனிதா வில்லியம்ஸ் கூறுகையில், பகவத் கீதை மற்றும் சமோசா இவை இரண்டுமே என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. எனது தந்தை எனக்கு அளித்த பரிசு பகவத் கீதை. பூமியில் உள்ள மனிதர்கள் போலவே விண்வெளியிலும் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்கு இது உதவுகிறது என்று கூறியுள்ளார் சுனிதா வில்லியம்ஸ்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications