சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராத்திரி 1 மணி.. பொண்ணு, மாப்பிள்ள ரூமில் இருக்காங்க, நம் "தலைவர்" கதவை தட்டறார்.. அன்புமணி ருசிகரம்

ஜிகே மணி குறித்து சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார் அன்புமணி ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: பாமக தலைவர் ஜிகே மணிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், அன்புமணி ராமதாஸ் சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை கூறியிருந்தது, அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

Recommended Video

    PMK Leader ஆனார் Anbumani Ramadass! இளைஞரணி To தலைவர் | #Politics | OneIndia Tamil

    வடமாவட்டங்களில் பாமக தன்னுடைய செல்வாக்கை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. அதேபோல தென்மாவட்டங்களிலும் பலத்தை பரப்ப வேண்டிய நெருக்கடியிலும் உள்ளது.

    நடந்து முடிந்த தேர்தல்களில் பாமகவின் தோல்வி அதிர்ச்சியை தந்தாலும், வடமாவட்டங்களிலும் அக்கட்சி தன்னுடைய செல்வாக்கை இழந்து கொண்டிருப்பது தேர்தல் முடிவுகளில் தெரியவந்தது.

    ராமதாசின் படைத்தளபதி ஜி.கே.மணி! ஆசிரியர் டூ பாமக தலைவர்! ஒரே பதவியில் 25 ஆண்டுகள்! ருசிகர பின்னணி!ராமதாசின் படைத்தளபதி ஜி.கே.மணி! ஆசிரியர் டூ பாமக தலைவர்! ஒரே பதவியில் 25 ஆண்டுகள்! ருசிகர பின்னணி!

     பாமக நிறுவனர்

    பாமக நிறுவனர்

    எனினும், கடந்த சில மாதங்களாகவே பாமக புத்துணர்ச்சி பெற்று வருகிறது.. திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம் ஆகிய தொகுதிகளில் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டன.. அந்தக் கூட்டங்களில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளிப்படுத்திய வலிமிகுந்த வரிகளை மறந்துவிட முடியாது.. வார்த்தைக்கு வார்த்தை, பாமகவின் பலம் பற்றி சொன்னதுடன், அன்புமணியை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும், கோட்டைக்கு அனுப்ப வேண்டும் என்ற அவரது ஆழ்மன எண்ணமும் வெளிப்பட்டு கொண்டே இருந்ததை கவனிக்க முடிந்தது.

     அன்புமணி முதல்வர்

    அன்புமணி முதல்வர்

    எதிர்வரும் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து அன்புமணி ராமதாஸை மறுபடியும் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கடுமையாக முயற்சித்து வருகிறார்... அதன் முன்னோட்டமாக அன்புமணி ராமதாஸ் பாமகவுக்கு செல்வாக்குள்ள வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி தொண்டர்களை சந்தித்தும் வருகிறார். இந்நிலையில் பாமக தலைவர் ஜி.கே மணிக்கு வெள்ளி விழா இன்று கொண்டாடப்பட்டது.

    வாழ்த்து

    வாழ்த்து

    அதில் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ்,ஜிகே மணியை வாழ்த்திப் பேசினார்... குறிப்பாக, ஜிகே மணியின் உழைப்பு, தியாகம், அர்ப்பணிப்பு, போன்றவைகளை விலாவரியாக எடுத்துரைத்தார்.. அப்போது ஜிகே மணியின் கடமை உணர்ச்சி பற்றியும் அன்புமணி மேடையில் பேசியபோது சொன்னதாவது:

    நடுராத்திரி

    நடுராத்திரி

    கல்யாணத்துக்கு யார் பத்திரிகை தந்தாலும், தலைவர் ஜிகே மணி சென்று கலந்து கொள்வார்.. அந்த திருமணம் எவ்வளவு தூரத்தில் நடந்தாலும், இதற்காகவே பயணம் மேற்கொண்டு சென்று, மணமக்களை வாழ்த்தி விட்டு வருவார்.. எத்துணை நல்ல குணம் அது.. ஒரு உதாரணம் சொல்றேன்.. ஒரு ஊரில் கல்யாணமே முடிந்துவிட்டது. இவரால் நேரத்துக்கு கல்யாணத்துக்கு போக முடியவில்லை.. ராத்திரி 1 மணிக்கு பொண்ணு மாப்பிள்ளை ரூமில் இருக்காங்க.. இவர் அங்கே போய் கதவை தட்டுகிறார்.. அந்த அளவுக்கு மனிதர்கள் மீது பாசம், கடமையை தவறாதவர்" என்று அன்புமணி சிரித்து கொண்டே சொன்னபோது, அரங்கத்தில் சிரிப்பலை அதிர எழுந்தது.

    English summary
    Super and Dedicated, pmk Anbumani ramadoss praises senior leader gk mani
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X