கவனிச்சீங்களா.. ஓபிஎஸ் சொன்ன அந்த வார்த்தைகள்.. அப்படியே நெகிழ்ந்து போன துரைமுருகன்.. சபாஷ்

துரைமுருகனை ஓபிஎஸ் மனம் திறந்து பாராட்டி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைவரிடத்திலும் பாசம் காட்டக்கூடியவர் துரைமுருகன்.. உயர்ந்த உள்ளத்திற்கும் அவர் சொந்தக்காரர் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக சட்டமன்றத்தில் இன்று பாராட்டி பேசினார்.

Recommended Video

    சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினின் புகழாரம்…கண் கலங்கிய துரைமுருகன்!

    3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடியது.. சட்டப்பேரவையில் இன்றையதினம் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்..

    எனவே, இன்றைய தினம் துரைமுருகனை முதல்வர் ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள்.. முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, துரைமுருகன் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிவிட்டார்.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    முக்கியமாக, துரைமுருகன் சட்டசபையில் இடம்பெற்றிருந்தாலே, அவையே கலகலப்பாக இருக்கும்... ஜெயலலிதா ஏதாவது சீரியஸாக பேசி கொண்டிருந்தால், துரைமுருகன் உள்ளே புகுந்து வேறு எதையாவது சொல்லிவிடுவார்.. இதனால் தன்னையும் அறியாமல் சிரித்துவிடுவார் ஜெயலலிதா... துரைமுருகன் பேச்சை ரசித்து கேட்பார்.. அவரது பாடி லேங்குவேஜை அடிக்கடி சொல்லி ஜெயலலிதா கிண்டல் செய்வதும் உண்டு. அதனால் கட்சிக்கும் அப்பாற்பட்டு தலைவர்கள் துரைமுருகனின் சட்டசபை பேச்சுக்கு ரசிகர்களாகி போனதும் உண்டு.

    பாராட்டு

    பாராட்டு

    இந்நிலையில், சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.. எனவே, இன்றைய தினம் துரைமுருகனை முதல்வர் ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள்.. முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, துரைமுருகன் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிவிட்டார்.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    ஸ்டாலின் பேசும்போது, "துரைமுருகனை கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன் இடத்தில் வைத்து பார்க்கிறேன்.. துரைமுருகனை கருணாநிதி அவர்கள், துரை துரை என்று அழைப்பார்.. புன்னகை எப்போதும் அவரது முகத்தில் இருக்கும்.. எனக்கு வழிகாட்டியாக இருந்து கொண்டிருப்பவர்.. மனதில் பட்டதை பேசக்கூடியவர்.. கட்சிக்கும், ஆட்சிக்கும் துரைமுருகன் உறுதுணையாக இருக்கிறார்.. 100 ஆண்டுகால வரலாற்றில் 50 ஆண்டுகாலம் சட்டப்பேரவையை அலங்கரித்துகொண்டுள்ளார் என்று புகழாரம் சூட்டினார்.

     நயினார் நாகேந்திரன்

    நயினார் நாகேந்திரன்

    பாஜகவின் நயினார் நாகேந்திரன் பேசும்போது, "அனைவரிடத்திலும் பாசம் காட்டக்கூடியவர் துரைமுருகன்... விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்.. கலைஞருக்கு மட்டுமல்ல அவரது வழித்தோன்றலுக்கும் விசுவாசமாக இருப்பவர்" என்றார்... அதேபோல பாமக தலைவர் ஜி.கே.மணி பேசும்போது, "சிந்தனை ஆற்றல், சொல் ஆற்றல், சாதனை ஆற்றல் என்று பல்வேறு திறமைகளை கொண்ட பன்முக ஆற்றல் கொண்டவர் துரைமுருகன். கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் நிழலாக இருப்பவர் துரைமுருகன்; மருத்துவர் ராமதாஸ் அய்யா மீது மிகுந்த பற்று கொண்டவர்" என்றார்.

     நெகிழ்ச்சி

    நெகிழ்ச்சி

    இதில் ஓபிஎஸ், துரைமுருகனை பாராட்டியது அனைவராலும் அவையில் கவனிக்கப்பட்டது.. "50 ஆண்டு காலம் என்பது நீ்ண்ட நெடிய வரலாறு... 10 முறை சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் துரைமுருகன். அனைவரிடத்திலும் பாசம் காட்டக்கூடியவர் ஓபிஎஸ்.. ஒரே மாதிரியாக நடந்து கொள்பவர்... உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர்...

    இலக்கணம்

    இலக்கணம்

    சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திகழ்பவர் துரைமுருகன்.. சூடாக பேசுவார், ஆனால், அடுத்த வினாடியே இனிமையாக பேசும் ஆற்றல் கொண்டவர்.. உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தகாரர்தான் துரைமுருகன். நிறைய பாடங்கள் துரைமுருகனிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளேன்.. இன்றுபோல் என்றும் உடல்நலத்தில் ஆரோக்கியத்தோடு நூறாண்டுகள் வாழ வேண்டும்" என்று மனம் திறந்து பாராட்டினார்.

     வெற்றி - தோல்வி

    வெற்றி - தோல்வி

    அதனைத் தொடர்ந்து பேசிய துரைமுருகன், "என் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசி இருக்கிறேன். வார்த்தைக்காகவும், பொருளுக்காகவும் யோசித்தது இல்லை. ஆனால் இன்றைக்கு எனக்கு பேச வார்த்தைகள் இல்லை... எத்தனையோ வெற்றி தோல்விகள் நடைபெற்றிருந்தாலும், என் தலைவர் இன்றைக்கு கொண்டு வந்த தீர்மானத்தில் அனைத்து கட்சிகளும் பாராட்டியுள்ளனர்... இந்தத் தீர்மானம் வருமென்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நான் சாதாரண கிராமத்தைச சேர்ந்தவன், விவசாயி மகன்" என்றார்.

    அமைச்சர்கள்

    அமைச்சர்கள்

    திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அதிமுக கூட்டணிகள் புழுதி வாரி இறைத்து வருகின்றன.. அதேசமயம், கருணாநிதி, ஜெயலலிதா இன்ற இருபிம்பங்கள் இல்லாத இன்றைய அரசியல் சூழலில், அரசியல் நாகரீகம் என்பது காணாமல் போய்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழும் அளவுக்கு கடந்த கால அதிமுகவின் சில மாஜி அமைச்சர்கள் பேசிய அதிர்ச்சி பேச்சுக்களும், பேட்டிகளும் அமைந்திருந்தன..

     அரசியல் நாகரீகம்

    அரசியல் நாகரீகம்

    ஆனால், அரசியல் நாகரீகம் என்பது இன்னும் தமிழ்நாட்டில் மண்ணோடு மண்ணாக மக்கி போய்விடவில்லை என்பதும், அது மீண்டும் துளிர்த்து தழைக்க தொடங்கி உள்ளது என்பதும் இன்றைய சட்டசபை நிகழ்வின் மூலம் நமக்கு தெரியவருகிறது.. இந்த கலாச்சாரம் மேன்மேலும் தழைத்தோங்குவது அரசியலை மேலும் மேன்மையானதாக்கும், என்பதோடு நம் மாநிலத்தின் நலனுக்கும் வழிவகுக்கும் என்பதில் கொஞ்சம்கூட சந்தேகமில்லை..!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+