இறையன்பு அறிவித்த முக்கிய அறிவிப்பு.. இனிமேல் அமைச்சரை இப்படித்தான் கூப்பிடணும்.. தமிழக அரசு அதிரடி
இறையன்பு தகவல் தொழில்நுட்ப துறை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
சென்னை: தமிழக அரசின் ஐ.டி. துறையின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. புதிய தகவல் தொழில் நுட்பவியல் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு துறைகளில் மாற்றங்களையும், புதுமைகளையும், முன்னேற்றங்களையும் செய்து வருகிறது.
அதிலும் எந்த அரசிலும் அதிகம் பேசப்படாத துறைகளாக கருதப்பட்ட, துறைகளான இந்து அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாற்றங்கள் அதிகம் நடந்து கொண்டிருக்கிறது. இது தமிழக மக்களையும் ஈர்த்து வருகிறது..

தகவல் தொழில்நுட்பம்
அந்த வகையில், ஐடி துறையையும் விட்டு வைக்கவில்லை.. மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் மற்றும் மின் ஆளுகையின் வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கத்துடனும் தகவல் தொழில்நுட்பவியல் துறை கடந்த 1998ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி உருவாக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பசேவைத் துறைகளின் வளர்ச்சியானது ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும்.

ஐடி நிறுவனம்
அதனால், ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைவதற்கு முன்முயற்சியுடன் கூடிய ஒருங்கிணைந்த கொள்கைவழி அணுகுமுறை தேவைப்படுகிறது.. முதல் கட்டமாக, வளர்ந்துவரும் தொழில்நுட்பப் பிரிவுக்கு தலைமை தாங்கும் வகையில் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவி தகவல் தொழில்நுட்பவியல் துறையில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது. வளர்ந்துவரும் மற்றும் ஆழ்நிலைத் தொழில்நுட்பங்களில் தொடக்கநிலை நிறுவனங்கள் மூலம், புதுமைகளை உருவாக்குவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (iTNT Hub) ஒன்று சென்னையில் அரசால் நிறுவப்பட்டு வருகிறது.

அரசாணை
எனவே, மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பச் சேவைகளின் வளர்ச்சியை வலுப்படுத்த இத்துறை, "தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை" என்று மறுபெயரிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.. இந்நிலையில் தகவல் தொழில் நுட்பவியல் துறை "தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை" என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அமைச்சர்
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், இனிமேல் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் என அழைக்கப்படுவார். இதற்கான அரசாணையை, தலைமை செயலர் இறையன்பு வெளியிட்டுள்ளார். அதேபோல, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் வளர் 4.0 வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.. இதற்கான அறிவிப்பை, அமைச்சர் மனோ தங்கராஜ் சமீபத்தில், சட்டசபையில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..
-
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications