ரயில் பயணிகளுக்கு நற்செய்தி.. அரக்கோணம் டூ சேலம்.. இந்த 10 ரயிலில் மாற்றம்.. தெற்கு ரயில்வே அதிரடி
சென்னை: தெற்கு ரயில்வே பயணிகளின் நன்மைக்காகவும், வசதியை கருத்தில் கொண்டும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இப்போதும் ஒரு சிறப்பு தகவலை தெரிவித்து, ரயில் பயணிகளை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது.
நாளுக்கு நாள் தமிழகத்தில் ரயில் சேவைகளின் தேவை அதிகரித்தபடியே உள்ளது.. அதனால்தான், தங்குதடையின்றி பயணிகளுக்கு வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஏராளமான மாற்றங்களை தென்னக ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

இதில், முக்கியமானது, பயணிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, கூடுதல் ரயில் பெட்டிகளை, சம்பந்தப்பட்ட ரயில்களில் இணைப்பதாகும்.
மயிலாடுதுறை: அந்தவகையில், மயிலாடுதுறை - சேலம் ரயில் சேவையிலும் மின் பெட்டிகள் இணைக்கப்பட்டன.. மயிலாடுதுறை - சேலம் - இடையே தினசரி பகல் நேர விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.. இந்த ரயிலை, அனைத்து தரப்பினருமே அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.. தஞ்சை, திருச்சி குளித்தலை, கரூர், மோகனூர், நாமக்கல், ராசிபுரம் வழியாக இயக்கப்படும் இந்த ரயிலில், பயணிக்க முன்பதிவு தேவையில்லை..
இந்த ரயிலுக்கு மின்தொடர் பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக கடந்த ஜுன் 3ம் தேதியே தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, சேலம் ரயில் நிலையத்திலிருந்து ஜூன் 7ம் தேதி முதல் 16812 மயிலாடுதுறை விரைவு ரயில், மின் தொடர் பெட்டிகள் கொண்டு இயக்கப்பட்டுள்ளது.. அதேபோல மறுமார்க்கத்தில் மயிலாடுதுறையிலிருந்து ஜூன் 8ம் தேதி முதல் 16811 சேலம் விரைவு ரயில், மின்தொடர் பெட்டிகள் கொண்டு இயக்கப்பட்டுள்ளது.
10 ரயில்கள்: இந்நிலையில், குறுகிய துாரத்தில் இயக்கப்படும் 10 பயணியர் ரயில்கள், வரும் 1ம் தேதி முதல் 12 பெட்டிகளாக மாற்றி இயக்கப்பட உள்ளதாக அடுத்த அதிரடியை தெற்கு ரயில்வே கையில் எடுத்திருக்கிறதாம்.
சென்னை கடற்கரை - மேல்மருவத்துார், அரக்கோணம் - சேலம், சேலம் - மயிலாடுதுறை உட்பட, 15க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் குறுகிய துார பயணியர் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.. ஆனால், இந்த ரயில்களில் வெறும் 8 பெட்டிகளே உள்ளன..
பயணிகள் நெரிசல்: முக்கிய மாவட்டங்களை இணைக்கும் இந்த ரயில்களில், எந்நேரமும் பயணிகளின் நெரிசல் இருந்தபடியே உள்ளது.. அதுவும் இல்லாமல் இந்த ரயிலில் சிறிய கதவுகள் இருப்பதால், பயணியர் ஏறி, இறங்குவதிலும் நிறைய சிரமம் ஏற்படுகிறது... அதனால்தான், தற்போது 8 பெட்டிகள் உள்ளதை, 12 பெட்டிகளாக இணைத்து இயக்க முடிவு செய்துள்ளதாம் ரயில்வே நிர்வாகம்.
அதன்படி, சென்னை கடற்கரை - மேல்மருவத்துார், அரக்கோணம் - சேலம், சேலம் - அரக்கோணம், சேலம் - மயிலாடுதுறை, மேல்மருவத்துார் - விழுப்புரம், விழுப்புரம் - மேல்மருவத்துார், கடற்கரை - திருவண்ணாமலை, திருவண்ணாமலை - சென்னை கடற்கரை உட்பட 10 ரயில்கள் 12 பெட்டிகளாக மாற்றப்படுவதாக தெரிகிறது.
அதிகாரிகள் நம்பிக்கை: இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "வரும் அக்டோர் 1 முதல் படிப்படியாக 12 பெட்டிகளாக மாற்றி இயக்க உள்ளோம்... இவற்றில் போதிய அளவில் கழிப்பறை வசதியும் இருக்கும்... பயணிகள் பயன்பெறும் வகையில், நோட்டீஸ் போர்டு உள்ளிட்ட வசதிகளும் இடம்பெறும்" எனற நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். இந்த வசதிகள் மட்டும் வந்துவிட்டால், மேற்கூறிய மாவட்ட மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications