ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு..தமிழக அரசு தந்த சர்ப்ரைஸ் பாருங்க.. துள்ளிகுதிக்கும் ரேஷன் ஊழியர்கள்
சென்னை: ரேஷன் கடைகள் குறித்து தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதைக்கேட்டு ரேஷன் கடை ஊழியர்களும் , மிகுந்த குஷியில் உள்ளனர். என்ன காரணம்?
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பல பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டு வருகின்றன..

ரேஷன் கடைகள்: மேலும், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.. இப்படி ரேஷன்தாரர்களுக்கு மட்டுமல்லாமல், ரேஷன் ஊழியர்களுக்கும் சிறப்பு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது.
இப்படித்தான், கடந்த ஜூலை மாதம், நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்து, இன்ப அதிர்ச்சியை தந்திருந்தது.. அதாவது, காதி பொருட்கள், பனைவெல்லம் போன்ற கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்யும் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு இந்த ஊக்கத்தொகையை அறிவித்தது..
ஊக்கத்தொகை: அதன்படி, சென்னையில் ரேஷன் கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், கிராமப்புற ரேஷன் கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் ஊழியர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் ஊழியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.
அதுமட்டுமல்ல, அரசின் இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ஊழியர்களுக்கு அம்மாதம் வழங்கப்பட வேண்டிய விற்பனை தொகையில் இருந்து ஒரு சதவீதம் ஊக்கத்தொகையாக கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது..
பொங்கல் பண்டிகை: இந்நிலையில், இன்னொரு சிறப்பு செய்தி வெளியாகி உள்ளது.. அதாவது, கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு, இலவச மளிகை தொகுப்பு, பொருட்கள் மற்றும் ரூ.1000 பரிசுத்தொகையை அரசு வழங்கியிருந்தது.. ஆனால், பண்டிகைக்குள் அனைத்து அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்க வேண்டும் என்ற நிலைமை இருந்தால், ரேஷன் கடை ஊழியர்களின் பணியும் டபுள் மடங்காகிவிட்டது.
எனினும், பண்டிகைக்குள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகையை கிடைக்கும்படி, ஊழியர்கள் செய்துவிட்டனர். இந்த அயராத பணியை கருத்தில் கொண்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை பரவலாக எழுந்தது.. இந்த கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டு, ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசும் முடிவு செய்தது.
இதற்காகவே, ரேஷன் கடை ஊழியர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.. சுமார் ரூ.1.07 கோடி நிதியும் ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
மகிழ்ச்சி அறிவிப்பு: ஒரு கார்டுக்கு ரூ.0.50 வீதம், 1.07 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையானது, ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications