சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வெல்லம்" போல் வந்த உத்தரவு.. பள்ளிகளுக்கு மேஜர் ஆர்டர்.. போக்குவரத்துறையும் மாஸ்.. மக்கள் பூரிப்பு

மாணவர்களும், ஆசிரியர்களும் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறையும், போக்குவரத்து துறையும், தங்கள் துறைவாரியான முக்கிய உத்தரவுகளை பிறப்பித்ததுடன், மக்களையும் திக்குமுக்காட செய்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், தங்கள் பெயரையும், முன்னெழுத்தையும், கட்டாயம் தமிழில் எழுத வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.

அதேபோல, இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மிதமான விவாதம் நடைபெற்றது.

மீண்டும் போராட்டம்? டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்.. போலீஸ் குவிப்பு.. போக்குவரத்து நெரிசல்மீண்டும் போராட்டம்? டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்.. போலீஸ் குவிப்பு.. போக்குவரத்து நெரிசல்

டாக்குமெண்ட்கள்

டாக்குமெண்ட்கள்

அப்போது, தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.. அதாவது, முதல்வர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை என அனைத்து அரசு அலுவலர்களும் தங்களின் கையெழுத்தையும் மற்றும் முன்னெழுத்துகளையும் தமிழ் மொழியில் இடவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் அரசு வெளியிடும் ஆணைகளிலும், ஆவணங்களிலும் குறிப்பிடப்படும் பெயர்களும் தமிழில் இருக்க வேண்டும்... இதே போல் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணியாற்றும் ஆசிரியர்களும் தங்களின் பெயர்களை தமிழ் மொழியிலே இட வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது.

 இன்ஷியல் + கையெழுத்து

இன்ஷியல் + கையெழுத்து

இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில், பள்ளி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். அதில், தொடக்க கல்வி முதல் கல்லுாரி காலம் வரை, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், முதலில் மாணவர்களின் பெயரில் தமிழை சேர்ப்பது சிறப்பானது என, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தமிழில் பெயர் எழுதும்போது, அதன் முன் எழுத்தான இனிஷியலையும், தமிழில் எழுதும் நடைமுறையை அன்றாட வாழ்வில் கொண்டு வர வேண்டும்.

அட்டன்டன்ஸ்

அட்டன்டன்ஸ்

பள்ளியில் சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லுாரிகளில் படிப்பை முடித்து பெறும் சான்றிதழ்கள் வரை, அனைத்திலும் தமிழ் முன் எழுத்துடன் வழங்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும்.மாணவர்கள் தங்கள் கையெழுத்துகளை தமிழ் முன் எழுத்துக்களுடன் கையொப்பமிடவும் அறிவுறுத்தப்படுகிறது.. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை, பள்ளி கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தது.

இன்ஷியல்

இன்ஷியல்

இந்நிலையில், தற்போது இதனை சுட்டிகாட்டி பள்ளிக்கல்வித்துறை அனைத்து முதன்மை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது... அந்த உத்தரவில், "ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இடவேண்டும், பள்ளி மாணவர்கள் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதேபோல், வருகைப்பதிவேடு உள்ளிட்டவற்றில் மாணவர்கள் பெயரை எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே பதிவு செய்திட வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது...

 சபாஷ் உத்தரவு

சபாஷ் உத்தரவு

அதுமட்டுமல்ல, அனைத்து பதிவுகளிலும் பெயர்களை தமிழில் பராமரிக்கவும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. தமிழக அரசு ஆணையை சுட்டிக்காட்டி கல்வி ஆணையர் இந்த நடைமுறையை அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே, போக்குவரத்து கழகம் சார்பாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..

 மாறி மாறி உத்தரவு

மாறி மாறி உத்தரவு

அதில், "போக்குவரத்து கழகத்தின் சார்பாக பராமரிக்கப்படும் பதிவேடுகள், கோப்புகள் அனைத்தும் தமிழல் பராமரிக்க வேண்டும், வருகைப் பதிவேட்டில் பணியாளர்கள் தமிழில் கையொப்பமிட வேண்டும்" என்று, அனைத்து கிளை, பிரிவு மேலாளர்களுக்கும் போக்குவரத்து துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.. போக்குவரத்து துறையும், பள்ளிக்கல்வி துறையும், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை வலியுறுத்தும் விதமாக தங்கள் அதிரடிகளை வெளிப்படுத்தி வருவது, தமிழக மக்களுக்கு பெருமிதத்தை ஏற்படுத்தி வருகிறது.

English summary
Big and happy announcement bu TN Education and Transport Department: Tamil Language மாணவர்களும், ஆசிரியர்களும் தமிழில் கையெழுத்திட வேண்டும் (தமிழ் கையெழுத்து, தமிழில் கையெழுத்து Tamil signature, Tamil sign in education department) என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X