தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. இனி "இது" தேவையில்லையாம்.. பொதுமக்கள் குஷி!
தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாம்
சென்னை: தமிழக மக்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவுத் துறை, முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்..
மலிவு விலையில் கிடைக்கும் இந்த பொருட்களால்,. எத்தனையோ குடும்பங்கள் நன்மை அடைந்து வருகின்றன... வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக இருந்து வருகின்றன.

ரேஷன் கடை
மற்றொரு பக்கம் ரேஷன் விநியோகிப்பதில் பல்வேறு முறைகளை அரசு கையாண்டு வருகிறது.. அதில் ஒன்றுதான் பயோமெட்ரிக் முறையாகும்.. ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் நேரில் வந்து தங்களது கைரேகையை பதிவு செய்து பொருட்களை வாங்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது.

பயோமெட்ரிக்
ஆனால், பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. வயதானவர்கள் ரேஷன் கடைகளுக்கு வரும்போது அவர்களது கைரேகைகள் சரியாக பதிவது இல்லை, எனவே, அவர்கள் பொருட்களை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது... கைரேகை பதிவை புதுப்பித்து வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் அலைக்கழிக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன...

கைரேகை
கைரேகை பதிவு இல்லாமல் பொருட்கள் வழங்கக்கூடாது என்று அதிகாரிகள் ஒருபக்கம் சொல்கிறார்கள்.. பலருக்கும் கைரேகை பதிவாவதில்லை அதிகாரிகளிடம் சொன்னாலும், அதை பற்றி காதில் வாங்கி கொள்வதில்லை என்று ரேஷன் கடை ஊழியர்கள் சொல்கிறார்கள்.. இப்படி நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும், பொருட்களை மட்டும் தங்குதடையின்றி பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருந்து வருகிறது.

தமிழக அரசு
இந்நிலையில், தமிழக கூட்டுறவுத் துறை புதிதாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. அதன்படி, ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகைப் பதிவு வேலை செய்யாவிட்டாலும்கூட பரவாயில்லை, பழைய முறைப்படி, அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது... அதேசமயம், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் எந்த காரணத்திற்காகவும் தடைப்பட்டுவிடக்கூடாது என்றும் கூடுதலாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

தமிழக அரசு
இந்நிலையில், தமிழக கூட்டுறவுத் துறை புதிதாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. அதன்படி, ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகைப் பதிவு வேலை செய்யாவிட்டாலும்கூட பரவாயில்லை, பழைய முறைப்படி, அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது... அதேசமயம், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் எந்த காரணத்திற்காகவும் தடைப்பட்டுவிடக்கூடாது என்றும் கூடுதலாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
-
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு?












Click it and Unblock the Notifications