கையில் குச்சி.. இன்று துப்பாக்கியுடன்.. காட்டுக்குள் நுழைந்த திமுக சுப்பிரமணியன்.. சபாஷ் மலைமக்கள்
காட்டுக்குள் மா. சுப்பிரமணி ஜாக்கிங் செய்யும்போது, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு தந்தனர்
சென்னை: அமைச்சர் மா.சுப்பிரமணியன், காட்டுக்குள் விறுவிறுப்பாக ஜாக்கிங் செய்யும் வீடியோ ஒன்று பலராலும் இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் ஜுன், ஜூலையில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது.. அப்போது, சுகாதாரத்துறை 24 மணி நேரமும் களத்தில் இறங்கி தீவிரமான பணியை மேற்கொண்டது.
அதிலும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாகவே மாவட்டங்களில் ஆய்வு செய்தார்.. இதில் பல ரிஸ்க்கான பயணங்களையும் மேற்கொண்டிருந்தார்.

கோட்டையூர்
அதில் ஒன்றுதான், கிருஷ்ணகிரி பெட்ட முகிலாலம் ஊராட்சியாகும்.. இதற்காக, இங்குள்ள கோட்டையூர் கொல்லை என்ற மலை கிராம ஊராட்சி நடுநிலை பள்ளியில் இரவு தங்கி, மறுநாள், கொடகரை, காமகிரி, மலைக்கிராமங்களில் ஆய்வு செய்தார்... அதற்கு பிறகு, கொரோனா பணிகள் குறித்து ஆய்வு செய்ய, மூக்கன்கரை மலைக்கிராமத்துக்கு செல்ல முடிவு செய்தார்.. ஆனால், இந்த மூக்கன்கரை மலைக்கிராமமானது, சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது.. இந்த கிராமத்துக்கு அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் செல்ல வேண்டும்..

கையில் குச்சி
பாதையும் சரியாக இல்லை.. அதனால் கையில் ஒரு கம்புடன் அமைச்சர் வனப்பகுதிக்குள் நடந்தார். அந்த மலைக்கிராமத்தில் வீடு, வீடாக சென்று, கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த மூக்கன்கரை மலைப்பகுதியானது யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியாம்.. அதனால், காட்டுக்குள் நுழையும்போதே, கையில் ஒரு பெரிய குச்சியுடன்தான் சென்றார்..

பழங்குடி மக்கள்
இதுவரை மலை கிராமத்திற்கு அரசு அதிகாரிகள் கூட யாரும் வந்து போகாத நிலையில், திடீரென சுகாதாரத்துறை அமைச்சரை பார்த்ததும் மலைகிராம மக்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிவிட்டனர்.. அதிலும் நேரடியாகவே வந்து குறைகளை கேட்டது, அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அப்போது ஏற்படுத்தியிருந்தது. அதுபோலவே, இப்போதும் ஒரு ரிஸ்க் எடுத்துள்ளார் சுப்பிரமணியன்.. ஈரோடு சத்தியமங்கலம் மலைப்பகுதி கிராமத்தில் அரசு திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.

ரிஸ்க் எடுத்த அமைச்சர்
இதற்காக ஆசனூர் மலைப்பகுதிக்கு வந்து தங்கியிருந்தார் அமைச்சர்.. மறுநாள், தாளவாடி மலைப்பகுதியில், "புன்னகை திட்டம்" உட்பட ஏராளமான அரசு திட்டங்களை தொடங்கி வைத்திருகிறார். இந்த மலைப்பகுதிக்கு வந்தும்கூட, ஜாக்கிங் செய்வதை அமைச்சர் நிறுத்தவில்லை.. ஆசனூர் பகுதியில், புலி சிறுத்தை போன்றவை நடமாடி கொண்டே இருக்குமாம். அதனால், பாதுகாப்பு கருதி, துப்பாக்கிய ஏந்திய அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்..

கையில் குச்சி
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகளும் அமைச்சருடன் துப்பாக்கியுடனேயே ஜாக்கிங் செய்தனர்.. அமைச்சர் ரெட் கலர் டி-ஷர்ட்டில் ஜாக்கிங் செய்ய, வனத்துறை அதிகாரிகள், யூனிபார்மிலேயே பின்னால் ஜாக்கிங் செய்து ஓடும், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. ஆக, எவ்வளவு ஆபத்து நிறைந்த இடங்களாக இருந்தாலும், கையில் குச்சி அல்லது துப்பாக்கிகளின் உதவியுடன், தன்னுடைய பணிகளை செய்து முடித்தும், ஜாக்கிங் விழிப்புணர்வு ஊட்டியும் வருகிறார் மா.சு.!












Click it and Unblock the Notifications