"கிளம்பி வாங்க".. வேற கட்சின்னுகூட ஸ்டாலின் பார்க்கலியே.. திமுக அரசின் ஜிலுஜிலு அறிவிப்பு.. சூப்பர்ல
சென்னை: அடுத்தடுத்து மாஸ் அதிரடிகளை வெளியிட்டு வரும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம், இப்போது முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.. இது மிகுந்த மகிழ்ச்சியை அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் இப்போது பதவி ஏற்றுள்ள திமுக ஆட்சி பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது... இந்த வகையில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பின் படி, நகை கடன் தள்ளுபடி, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என பல திட்டங்களை நிறைவேற்றிஉள்ளது..

அதேபோல, தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேருந்துகளில் இலவச பயணம் என்பதும் நடைமுறையில் உள்ளது.. ஆனால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் 4 மாதங்களுக்கு முன்பு ஒரு புகார் எழுந்தது..
புகாரில் என்ன இருந்தது: அந்த புகாரில், அரசு பேருந்துகளில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் உதவியாளர்கள் மட்டுமே இலவசமாக பயணம் மேற்கொள்ள டிரைவரும், கண்டக்டரும் அனுமதிக்கின்றனர். ஆனால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிப்பதில்லை என்று கூறப்பட்டது.. இதையடுத்து, இந்த புகார் குறித்து புதிய நெறிமுறைகளை தமிழக போக்குவரத்து துறை அப்போது வெளியிட்டிருந்தது..
அதன்படி, முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் அவர் உதவியாளர் ஒருவருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள உரிய இருக்கை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.. மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை அனுமதிக்காத ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு போக்குவரத்துக்கழகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.. இப்படிப்பட்ட சூழலில், மற்றொரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது..
சென்னை மாநகர: சென்னையில் இயக்கப்படும் மாநகர போக்குவரத்துக் கழகத்தின், ஏசி பஸ்களில் எம்பிக்கள் எம்எல்ஏக்கள், மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் முன்னாள் எம்எல்.சி.க்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்குமாறு டிரைவர்களுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனாலும் இதில் பல்வேறு புகார்கள் வந்ததால் அதை சரிப்படுத்தும் வகையில் நடத்துனர்களுக்கு மறுடிபயும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், பேரவை முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் மேலவை உறுப்பினர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் தனியாகவோ, மனைவி, கணவர் அல்லது உதவியாளருடன் சட்டசபை செயலகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் வரும்போது, அவர்களை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர் சாதன பஸ்களில் கட்டணமில்லாமல் பயணிக்க ஓட்டுநர், நடத்துநர்கள் அனுமதிக்க வேண்டும்.
குறிப்பாக அண்ணாநகர், மத்திய பணிமனை, பெரும்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய பணிமனைகளின் கிளை மேலாளர்கள், மேற்கூறிய உறுப்பினர்கள் மாநகர போக்குவரத்துக் கழக குளிர்சாதன பஸ்களில் பயணம் மேற்கொள்ள வரும்போது, அவர்களை கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.
குஷியோ குஷி: அவர்களிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்வதுடன் எவ்வித புகாரும் எழா வண்ணம் பணியாற்றுமாறு அறிவுறுத்த வேண்டும் என அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்... இந்த ஜில் அறிவிப்பானது, இந்நாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications