பட்டா மாறுதல் செய்யணுமா? வெறும் 16 நாளிலேயே தீர்வு.. அசத்தும் தமிழக அரசு.. சபாஷ் நில அளவை ஆணையரகம்
சென்னை: பட்டா மாறுதல் தொடர்பான சேவைகள், பொதுமக்களுக்கு விரைந்து கிடைக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. பட்டா மாறுதலில் ஏதாவது இடர்பாடுகள், சிக்கல்கள் இருப்பின் அதை எப்படி சரி செய்வது தெரியுமா?
நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து, அவை ஆன்லைனில் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு பிறகு பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் வசதிக்காக எந்நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் பட்டா மாறுதல் கோரி https://tamilnilam.tn.gov.in/citizen/என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி நடைமுறையில் உள்ளது. எனினும், இணையவழியில் பட்டா பெயர் மாற்றம் மற்றும் உட்பிரிவு விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
சான்றிதழ்கள்: அதனால்தான், அரசின் சேவைகள் மக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், சான்றிதழ்கள், பட்டா மனுக்கள் மீது 16 நாட்களில் தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசு கடந்த மே மாதம் அதிரடி உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான எஸ்.கே.பிரபாகர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை மூலம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதில், வருவாய்த்துறை வழங்கும் 26 சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் கோரிக்கைகள் ஆகியவை குறித்த நேரத்தில் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வாரந்தோறும் நில அளவை ஆணையரகம் ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறது.
தாலுகா: அதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு தாலுகாவிற்கும், துணை கலெக்டர் அந்தஸ்தில் ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.. அவருக்கு உதவியாக ஒரு துணை தாசில்தார் மற்றும் பிற தாலுகாவை சேர்ந்த ஒரு அலுவலர் பணியமர்த்தப்பட வேண்டும். இந்த சிறப்பு அதிகாரி, சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்கள் குறித்த மனுக்கள் மீது தொடர்ச்சியாக ஆய்வு செய்து கண்காணப்பார்.
பட்டா மனுக்கள் மற்றும் சான்றிதழ்கள் கோரும் விண்ணப்பங்கள் மீது அதிகபட்சமாக 16 நாட்களுக்குள் தீர்வு காண்பதை உறுதி செய்யவேண்டும். சிறிய காரணங்களை கூறி மனுக்கள் தள்ளுபடி செய்வது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்" என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
16 நாட்களில் தீர்வு: அந்தவகையில், சான்றிதழ்கள், பட்டா மனுக்கள் மீது 16 நாட்களில் தீர்வு காணும் நடவடிக்கைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஒருவேளை, பட்டா மாறுதலில் வேறு ஏதாவது பிரச்சனை ஏற்படும் பட்சத்தில், புகார்களை தந்து சரி செய்து கொள்ளலாம்.
இதற்கு முதலில் செய்ய வேண்டியது, மாறுதல் செய்யப்பட்ட விண்ணப்ப நகல் எடுத்து கொண்டு, கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுக்க வேண்டும். அடுத்ததாக வட்டாட்சியரிடம் மனு கொடுக்க வேண்டும்.
புகார்கள்: அடுத்ததாக வருவாய் கோட்டாட்சியரிடமும், பின்னர் மாவட்ட வருவாய் அலுவலரிடமும் மனுக்கள் கொடுக்க வேண்டும். இதற்கு மேல் அனைத்து மனுக்களின் நகல் கொண்டு மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுக்கலாம். இந்த வழிமுறையை பின்பற்றி பட்டா மாறுதல் செய்ய முடியாவிட்டால், தகவல் அறியும் உரிமைசட்டம் கீழ் மனு கொடுக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications