ரயில்ல ரிசர்வேஷன் இல்லாமல் போறீங்களா? பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு.. இனிமேல் ஹேப்பி.. சபாஷ் ரயில்வே
சென்னை: ரெயில் நிலையங்களில் மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டத்தை தெற்கு ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விலைப்பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) சார்பில் கோடை காலத்தில் ரெயில் பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

ரிசர்வேஷன்: அதன்படி ரிசர்வேஷன் செய்யப்படாத பெட்டிகளில், பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காகவே இந்த ஸ்பெஷல் ஏற்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.. முக்கியமான ரெயில் நிலையங்களில் பொதுப்பெட்டிகள் நிற்கும் பகுதியில் இந்த மலிவு விலை உணவு கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் சாதாரண பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக மலிவு விலையில் உணவு விற்பனை செய்யப்படுகிறது... அந்தவகையில், சென்னை கோட்டத்தில் 5 ரெயில் நிலையங்களில் மலிவு விலை உணவு விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.
பூரி மசால்: சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம், எழும்பூர், தாம்பரம், செங்கல்படட்டு, அரக்கோணம் மற்றும் திருச்சி கோட்டத்தில் 3, சேலம்-4, மதுரை-2, பாலக்காடு-9, திருவனந்தபுரம் கோட்டம்-11 என முதல் கட்டமாக 34 ரெயில் நிலையங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகள் நிறுத்தப்படும் இடத்திற்கு அருகில் இந்த உணவு கவுண்டர் செயல்படுகிறது.
325 கிராம் எடை அளவில் 7 பூரி, மசால் வழங்கப்படுகிறது. இவற்றின் விலை ரூ.20. தயிர், எலுமிச்சை, புளியோதரை சாதம் 200 கிராம் கொண்ட எக்கனாமி மீல்ஸ் விலை ரூ.20, ஸ்னாக் மீல்ஸ் என்ற பெயரில் 350 கிராம் எடையில் மசால் தோசை உள்ளிட்ட தென்னிந்திய உணவுகள் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 200 மில்லி தண்ணீர் பாட்டில் ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை: மதுரை கோட்டத்தில், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ரெயில் நிலையங்களில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகள் நிற்கும் இடங்களில் குறைந்த விலை உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன... 250 கிராம் அளவுள்ள தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம் அல்லது பருப்பு கிச்சடி ஆகியவற்றில் ஏதாவது ஒன்று ஊறுகாயுடன் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பயணிகள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications