சர்க்கரை அட்டைதாரர்களுக்கு வருது தித்திப்பு செய்தி.. அப்ப ரேஷனில் பாமாயில் கிடையாதா? விவசாயிகள் குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் விரைவில் மாற்றம் தென்படும் என்கிறார்கள்.. இதுகுறித்த முக்கிய முடிவுகளை தமிழக அரசு வெகுசீக்கிரத்திலேயே எடுக்கும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, தென்னைமர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்துவிட்டு, தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற நீண்ட நாட்களாகவே கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

Ration Card Holders coconut oil Palm Oil

தேங்காய் எண்ணெய்: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்று தேங்காய் விவசாயிகளும் வேண்டுகோள் விடுத்தபடியே இருக்கிறார்கள். அத்துடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய்யை மக்களுக்கு வழங்கினால், சிறு, குறு எண்ணெய் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள் என்று அரசியல் கட்சிகளும், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களையும் மாவட்ட வாரியாக நடத்தி வருகிறார்கள்.

போராட்டங்கள்: தமிழக அனைத்து விவசாய சங்கமானது, சில நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் போராட்டத்தை நடத்தியிருந்தது. அப்போது, அச்சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்திருந்தார்..

அப்போது, "பாமாயிலை சாப்பிடுவதால், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு, ரேஷனில் விற்கப்படுகிறது. இதற்கு பதிலாக, நம்முடைய விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய், எள், நிலக்கடலையில் இருந்து, எண்ணெய் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். அரசு இதற்கு செவிசாய்க்காவிட்டால், மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தப்படும்" என்று கூறியிருந்தார்.

செவிசாய்ப்பு: இப்படி ஒட்டுமொத்த விவசாயிகளும், பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய்யை ரேஷனில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும்நிலையில், இதற்கு தமிழக அரசு செவிசாய்க்க உள்ளதாக தெரிகிறது.

ரேஷன் அட்டைதாரர்களின் கருத்தை அறியுமாறு ரேஷன் கடை மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறதாம்.. அந்தவகையில், ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெயை வழங்கலாமா? என்பது பற்றி பொதுமக்களிடம் அரசு கருத்து கேட்டு வருகிறதாம்.

கருத்து கேட்பு: இதற்கான கருத்துக்களை பதிவு செய்ய படிவங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாதம் இறுதி வரை பொது மக்களின் விருப்பத்தை கேட்டறிந்து அதன் விவரங்களை மாவட்ட நிர்வாகங்கள் அறிக்கையாக தொகுத்து அரசுக்கு அனுப்ப உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, 1 லிட்டர் பாமாயில் எண்ணைக்கு பதிலாக, 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்குவது பற்றி முதற்கட்ட மாக கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கருத்து கேட்பு நடக்கிறதாம்.

கார்டுதாரர்கள்: காரணம், இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும், தேங்காய் எண்ணெய்யை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துவதால் எத்தனை கார்டுதாரர்கள் இதற்கு மாறுவதற்கு ஆர்வமாக உள்ளனர் என்பதை அறியவே, கலெக்டர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம். எனினும், இதுகுறித்த கொள்கை முடிவை அரசு தான் எடுக்க வேண்டும் என்பதால், மாவட்ட கலெக்டர்களின் ஆய்வறிக்கைகள் கிடைத்த பிறகே, தமிழக அரசு இதில் இறுதி முடிவை அறிவிக்கும் என்கிறார்கள்.

ஒருவேளை, ஆய்வறிக்கை முடிவின்படி, தேங்காய் எண்ணெய் ரேஷனில் வழங்கப்பட்டால், பாமாயில் இனி வழங்கப்படுமா? அல்லது பாமாயிலும் சேர்த்தே வழங்கப்படுமா? என்று தெரியவில்லை.. எப்படி பார்த்தாலும், தேங்காய் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்றே நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+