ஹைய்யா.. குடை ரெடியா மக்களே.. இன்றும் நாளையும் அடிச்சு ஊத்த போகுது மழை.. எங்கேன்னு பாருங்க
தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பே, 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது... அதன்படி, கடந்த 2 தினங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது..

லேசான மழை
நேற்றைய தினம், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியானது.. குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.. இன்றைய தினம் அதாவது 3 ம் தேதியும் நாளை 4-ம் தேதியும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை
நாளை மறுநாள் 5-ம் தேதியும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்
இதனிடையே, காவிரி டெல்டா மாவட்டங்களுள் ஒன்றான திருவாரூரில் விவசாயிகள் பருத்தியை அதிக அளவு சாகுபடி செய்ய தொடங்கி உள்ளனர்... மேலும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கோடை சாகுபடியாக விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். அதனால், பருத்தி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நன்னிலம் அருகே உள்ள மூங்கில்குடி, சுரக்குடி, காக்கா கோட்டூர், பனங்குடி, ஆண்டிபந்தல் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 6 அளவில் திடீரென மழை பெய்தது. இதனால் பருத்தி விவசாயிகள் மிகவும் கவலைக்கு ஆளானார்கள்.

தலைநகர்
இதனிடையே, கடந்த ஜுன் 30-ந் தேதி தென்மேற்கு பருவமழை டெல்லியில் தொடங்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்த நிலையில், மழை லேசாக பெய்ய தொடங்கிவிட்டது.. சில சமயம், சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.. குளிர்ந்த காற்றும் அவ்வப்போது வீசிவருகிறது.. இனிமேல் டெல்லியில் வெப்பநிலை கணிசமாக குறையும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
நைட் முழுக்க கொட்ட போகுது மழை.. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் குளுகுளு கிளைமேட்! வானிலை மையம் அலர்ட் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications