ஸ்வீட் நியூஸ்.. கல்விக்கடன் பெறணுமா? மாணவர்களுக்கு மத்திய அரசு சர்ப்ரைஸ்.. ஆன்லைனிலேயே சூப்பர் வசதி
சென்னை: மாணவர்கள் கல்விக்கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதன் விவரம் என்ன?
ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் கல்விக்கடன் வழங்கி வருகின்றன... முக்கியமாக, பொறியியல், மருத்துவம், வணிக மேலாண்மை போன்ற தொழில் சார்ந்த படிப்புகளுக்கு கல்வி கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

இருந்தாலும், கல்விக் கடன் பெற்றவர்கள் வேலை கிடைத்த பின்னரும் கடனைச் சரியாக திருப்பி செலுத்துவது இல்லை என வங்கிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதன்காரணமாக ஏழை மாணவர்கள் கல்விக்கடன் கேட்டு வங்கி கிளைகளுக்கு செல்லும்போது அலைக்கழிக்கப்படுவதாகவும் அவ்வப்போது செய்திகள் கசிந்தன.
கல்விக்கடன்: அதனால்தான், கல்விக்கடன் பெறுவதற்கு எளிதாக விண்ணப்பிப்பதற்காக www.vidyalakshmi.co.in என்ற வெப்சைட் (விஎல்பி) கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 15- ம் தேதி தொடங்கப்பட்டது. இதில் மொத்தம் 35 பொதுத்துறை, தனியார் வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த வெப்சைட்டில் எளிமையாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பத்தின் நிலையையும் அறிந்துகொள்ளலாம். அதாவது, கட்டணம் செலுத்த முடியாத மாணவருக்கு இந்த கல்விக்கடன் வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் வங்கிக்கு நேரடியாக செல்ல தேவையில்லை.
வங்கிகள்: அனைத்து கல்வி கடன் நடவடிக்கைகளையும் கட்டாயமாக வித்யா லட்சுமி இணையதளம் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்றும், அனைத்து வங்கிகளும் தங்கள் கல்வி கடன் திட்டங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் ஏற்கனவே வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.
இந்நிலையில், கல்விக்கடன் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. மத்திய அரசின் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வீட்டு முகவரி, அருகிலுள்ள வங்கியின் பெயர், என்ன படிப்பு, எந்த கல்லுாரி, எத்தனை ஆண்டு, கல்விக்கட்டண விவரம், அலைபேசி எண், இ-மெயில் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
ஆய்வுகள்: இணையதள ஆய்வு குழு பரிசீலனைக்குப்பின் தொடர்புடைய வங்கிக்கு பரிந்துரை செய்யும். இதன் அடிப்படையில் கல்விக்கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு வரை பள்ளிப்படிப்பு முடிந்தவுடன், கல்லூரிகளில் படிப்பதற்காக, அந்தந்த பகுதிகளில் உள்ள வங்கிகளில் நேரடியாக விண்ணப்பம் கொடுத்து கல்லூரியிலிருந்து வழங்கும் சான்றுகளையும் வங்கியில் சமர்ப்பித்த பிறகு கல்விக் கடன் வழங்கினார்கள். ஆனால் பல வருடங்களாக கல்விக்கடன் கொடுப்பது குறைந்து வருகிறது.
முக்கியத்துவம்: அதனால்தான், கல்விக் கடன் பெற விரும்புவோர் மத்திய நிதித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள "வித்யாலெட்சுமி" என்ற இணையத்தில் தேவையான சான்றுகளுடன் விண்ணப்பித்து வருகிறார்கள்.. இந்த விண்ணப்பத்தை ஆய்வுக்குழு ஆய்விற்கு பிறகு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள வங்கிகளில் கடன் பெறலாம் என்பதால், இதற்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.. சம்மந்தப்பட்ட வங்கியின் நிதியின் அளவைப் பொறுத்து கல்விக்கடன் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications