சசிகலாவா? ஓபிஎஸ்க்கு ஜெர்க் கொடுக்கும் எடப்பாடி! தயாரான பட்டியல்..! தூண்டிலில் சிக்கிய மா.செ.க்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் தங்கள் தரப்பு பலத்தை நிரூபிக்க சசிகலா ஓ.பன்னீர்செல்வம் தயாராகி வரும் நிலையில் தற்போது தனது பலத்தை நிரூபிக்க முடிவெடுத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் மாவட்ட செயலாளர்களை தங்கள் தரப்புக்கு கொண்டு வர இரண்டு முன்னாள் அமைச்சர்களை களமிறக்கி இருப்பதாகவும் அதில் ஓரளவு வெற்றி கிடைத்து இருப்பதாகவும் கூறுகின்றனர் சேலம் நிர்வாகிகள்.

தொலைக்காட்சிகளில் வரும் அழுகாச்சி சீரியல்கள் போல அதிமுக விவகாரம் ஒரு முடிவே இல்லாதது போல நீண்ட காலமாக இழுத்துக் கொண்டே செல்கிறது. இதுக்கு ஒரு எண்டே இல்லையா என அந்தக் கட்சியினரே கூறும் அளவுக்கு தான் இருக்கிறது.

அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிச்சாமி இடம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் டெல்லி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. இதனை இரு தரப்பினருமே மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

அதிமுக விவகாரம்

அதிமுக விவகாரம்

இதில் வரும் தீர்ப்பை பொறுத்து அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் வழக்கிலும் தீர்ப்பு வரும் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இது இருக்கும் என கருதப்படுகிறது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக இதுவரை மாறி மாறி தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை இறுதியாக இருக்கும் என்பதால் தங்கள் தரப்புக்கே சாதகமாக இருக்கும் என உறுதியுடன் நம்புகிறது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு. அதே நேரத்தில் எம்ஜிஆர் வகுத்த விதிகளின்படி அவ்வளவு எளிதில் யாரையும் கட்சியை விட்டு நீக்க முடியாது எனவும் தங்கள் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்பு இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் தரப்பினரும் கூறி வருகின்றனர்.

நடுநிலை அதிமுகவினர்

நடுநிலை அதிமுகவினர்

இப்படி இருதரப்பினருமே மாறி மாறி பேசி ஒரு நிலையில் நடுநிலை வகிக்கும் தொண்டர்களும் நிர்வாகிகளும் அடுத்து என்ன நடக்கும் என யோசித்து வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இருக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் நிர்வாகிகளை தங்கள் தரப்புக்கு இழுக்கும் நடவடிக்கைகளில் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் ஈடுபட்டு வருகிறது. இடையே சசிகலா டிடிவி தினகரன் வேறு அதிமுக விவகாரங்களில் அடிக்கடி நுழைந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

சசிகலா ஓ பன்னீர்செல்வம் சந்திப்பு எப்போது என்பதும் அரசியல் களத்தில் பேசுபொருளாக இருக்கிறது இதனுடைய எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் சில முன்னாள் அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க இருப்பதாக தகவல்கள் உலாவி வரும் நிலையில் அதனை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மறுத்து வருகிறது. தங்கள் தரப்பு நிர்வாகிகள் எதிரணிக்கு செல்ல வாய்ப்பே இல்லை எனவும் எதிரில் நிர்வாகிகள் தான் தங்கள் தரப்புக்கு வர இருக்கிறார்கள் என உறுதியாக கூறுகின்றனர். குறிப்பாக ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இருக்கும் மாவட்ட செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் சுமார் 30 பேர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு வர இருப்பதாக சொல்கின்றனர்.

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

அதற்காக திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சரும் கோவையைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சரும் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் 75 சதவீதம் பேச்சு வார்த்தை நிறைவடைந்து நிலையில் அவர்கள் எடப்பாடி தரப்பில் சேருவார்கள் என கூறுகின்றனர். எடப்பாடி அணிக்கு எதிராக சசிகலா ஓ.பன்னீர்செல்வம் எந்த திட்டம் தீட்டினாலும் அவற்றை தவிடு பொடியாக்கும் வகையில் ஏற்கனவே முன்னேற்பாடுகள் செய்து வைக்கப்பட்டுள்ளது எனவும், கட்சி தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் தீர்ப்பு வந்த பிறகு முழுமையாக அவரது கட்டுப்பாட்டில் தான் அதிமுக இயங்கும் என உறுதியாக சொல்கின்றனர் சேலம் தரப்பு அதிமுகவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+