சாதிய பாகுபாடு காட்டினால்.. பாயும் ஆக்சன்! கல்லூரிகளில் UGC புதிய விதி! எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு!
சென்னை: சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டு உள்ள விதிமுறைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் பாகுபாடானது என்றும், இடஒதுக்கீடு இல்லாத பொதுப் பிரிவினரை (General Category) இது பாதுகாப்பதில்லை என்றும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முக்கியமாக இந்த விதிகளை பயன்படுத்தி பொதுப்பிரிவினருக்கு எதிராக பொய்யான புகார்கள் கொடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக அந்த வழக்கில் கூறப்பட்டு உள்ளது.

கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிராக UGC புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. 2012-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த பழைய விதிமுறைகளை மாற்றி, 2026 ஜனவரியில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது பல்கலைக்கழக மானியக் குழு (UGC). யுஜிசி 2026 சமத்துவ விதிமுறைகள் எனப்படும் இந்த விதிமுறைகள் கடுமையான விவாதங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. சாதி ரீதியிலான பாகுபாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் விதமாக இந்த விதிமுறைகள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன.
வழக்கின் பின்னணி
சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான வினீத் ஜிண்டால் இதற்கு எதிராகத்தான் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். யுஜிசி விதிகளில் உள்ள பிரிவு 3(c)-ஐ அவர் முக்கியமாக எதிர்த்துள்ளார். அந்தப் பிரிவில், சாதி ரீதியான பாகுபாடு என்பது எஸ்சி (SC), எஸ்டி (ST) மற்றும் ஓபிசி (OBC) பிரிவினருக்கு எதிராக நடக்கும் பாகுபாடுகளை மட்டுமே குறிக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இது தவறானது. இந்த விதிகளை மாற்ற வேண்டும் என்று அவர் மனுவில் கூறி உள்ளார்.
இந்த விதிமுறை இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவு (சமத்துவ உரிமை), 15-வது பிரிவு (பாகுபாடு காட்ட தடை) மற்றும் 21-வது பிரிவு (சுயமரியாதையுடன் வாழும் உரிமை) ஆகியவற்றை மீறுவதாக உள்ளது.
சாதி ரீதியான பாகுபாடு என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் நடப்பது அல்ல. ஒரு நபர் எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவருக்குப் பாகுபாடு இழைக்கப்பட்டால் அதிலிருந்து பாதுகாப்புப் பெற உரிமை உண்டு. ஆனால், யுஜிசி-யின் புதிய வரையறை பொதுப் பிரிவினருக்கு இந்தத் தீர்வைப் பெறுவதற்கான வாய்ப்பை மறுக்கிறது, என்று அவர் மனுவில் கூறி உள்ளார்.
யுஜிசி புதிய விதிமுறை
முன்னதாக 2012-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிகளின்படி, ஒரு மாணவர் சாதி ரீதியிலான பாகுபாட்டிற்கு உள்ளானார் என்றால் அதில் விசாரணைகள் நடத்தப்படும். ஒவ்வொரு கல்லூரியிலும் சாதி பாகுபாட்டை களைய ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பார். மேலும் இது தொடர்பாக புகார்களை அளிக்க அதற்கான மையம் இருக்க வேண்டும். இவை பெரும்பாலும் எஸ்சி (SC) மற்றும் எஸ்டி (ST) மாணவர்களுக்கான பாதுகாப்பை முக்கியமாக கருதின. மற்ற இடைநிலை சாதிகளுக்கு இதில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
யோகி தொடங்கி யூஜிசி வரை.. 48 மணி நேரத்தில் 3 பக்கங்கள் ஹேக்! அரசு கணக்குகளை குறி வைக்கும் ஹேக்கர்கள்
ஒரு புகார் அளிக்கப்பட்டால், அதன் மீது 60 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால், இந்த அமைப்பிடம் பெரிய அதிகாரம் இல்லை. உதாரணமாக தவறான புகார்களுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. நிறுவன ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பெரிய அளவில் இடம்பெறவில்லை.
2026-ல் கொண்டுவரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்
புதிய 2026 விதிமுறைகளின்படி, முதன்முறையாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் பாலின சிறுபான்மையினர் (Gender Minorities) ஆகியோரும் இந்தப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதூர படிப்புகளில் சேர வேண்டாம்.. யுஜிசி எச்சரிக்கை
மேலும், இது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கும் பொருந்தும். இதற்காக 'சமத்துவக் குழு' என்ற Equity Committee உருவாக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது பிற்படுத்தப்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் கூட தங்களுக்கு சாதிய பாகுபாடு காட்டப்பட்டால் புகார் அளிக்கலாம்.
இப்போது, இந்த குழுவில் தனியாக ஒரு அதிகாரிக்கு பதிலாக, கல்வி நிறுவனத்தின் தலைவரே தலைமை தாங்கும் விதமாக விதி மாறி உள்ளது. முன்பு தனியாக இதற்கு அதிகாரி இருப்பார் இனி அப்படி இல்லை. இந்த குழுவில் மூத்த ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் இடம்பெறுவார்கள். பாதிக்கப்பட்ட யாரும் இந்த குழுவிடம் புகார் அளிக்கலாம். அந்த புகார்களை கண்காணிக்க இதில் உறுப்பினர்களும் இருப்பார்கள்.
கடுமையான காலக்கெடு மற்றும் தண்டனைகள்
புதிய விதிகளின் கீழ் புகார்கள் மீதான நடவடிக்கை மிகவும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு புகார் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் குழு கூடி விவாதிக்க வேண்டும். 15 வேலை நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், அதன் பிறகு 7 நாட்களுக்குள் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை UGC இதை கண்காணிக்கும்.
இந்த விதிகளுக்குக் கீழ்ப்படியாத கல்வி நிறுவனங்களின் நிதி முடக்கப்படலாம் அல்லது அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம். இது பழைய முறையைப் போல வெறும் ஆலோசனை அமைப்பாக இல்லாமல், அதிக அதிகாரம் கொண்ட சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது.
உயர்கல்வி நிறுவனங்கள் சாதி பாகுபாடு
உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதி ரீதியான பாகுபாடுகளைக் களைந்து, மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் சாதி பாகுபாடு புகார்கள் 118.4% அதிகரித்துள்ள நிலையில், பழைய விதிகள் போதுமானதாக இல்லை என்று யுஜிசி கருதுவதால் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைகளும் விவாதங்களும்
இந்த விரிவான மாற்றங்கள் ஒருபுறம் வரவேற்கப்பட்டாலும், மற்றொருபுறம் கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்துள்ளன. முக்கியமாக பாஜக ஆதரவாளர்கள் இடையிலேயே கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறது. முக்கியமாக பிராமண அமைப்புகள், பிராமண மகா சபா போன்ற இயக்கங்கள் இதை எதிர்த்து உள்ளன.
குறிப்பாக, 2012 விதிகளைப் போலவே இப்போதும் 'பொய்ப் புகார்களுக்கு' எதிரான தெளிவான தண்டனைகள் அல்லது பாதுகாப்பு வரம்புகள் வழங்கப்படவில்லை என்று பாஜக ஆதரவாளர்கள் குமுறுகின்றனர்.
இதனால் கல்வி வளாகங்களில் ஒருவித அச்ச உணர்வு ஏற்படலாம் என்றும், இது நிர்வாக ரீதியான சிக்கல்களை உருவாக்கும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். இருப்பினும், வளர்ந்து வரும் பாகுபாடுகளைத் தடுக்க இத்தகைய வலுவான சட்டங்கள் காலத்தின் கட்டாயம் என்று ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications